இப்பவே முன்பதிவு செய்யலாம்: பட்ஜெட் விலை ஒப்போ ரெனோ 6 5ஜி- விற்பனை எப்போ தெரியுமா?

|

ஒப்போ கடந்தவாரம் ரெனோ 6 ப்ரோவுடன் ரெனோ 6 சாதனத்தை வெளியிட்டது. இதன் சார்பு மாடல்கள் தற்போது இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இதற்கிடையில் நிலையான ஒப்போ ரெனோ 6 ஜூலை 29 முதல் விற்பனை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் முன்கூட்டிய ஆர்டர்கள் பிளிப்கார்ட் மற்றும் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர்களில் கிடைக்கிறது.

இப்பவே முன்பதிவு செய்யலாம்: பட்ஜெட் விலை ஒப்போ ரெனோ 6 5ஜி!

ஒப்போ ரெனோ 6 5ஜி ஸ்மார்ட்போன் விலை மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.29,990 ஆக இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனை கிரெடிட் மற்றும் டெபிட்கார்ட்கள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளும் எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ மற்றும் கோட்டக் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ரூ.3000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.26990-க்கு பெறலாம். 12 மாதங்களுக்கு விலையில்லா இஎம்ஐ விருப்பமும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அரோரா, ஸ்டெல்லர் பிளாக் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் இந்த சாதனம் கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 6 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் (1,080x2,400 பிக்சல்கள்) மற்றும் அமோலெட் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்துடன் காட்சி வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு என்ற ஒற்றை வேரியண்ட் அம்சத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்ஷன் 900 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது.

இப்பவே முன்பதிவு செய்யலாம்: பட்ஜெட் விலை ஒப்போ ரெனோ 6 5ஜி!

ஒப்போ ரெனோ 6 5ஜி ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா சென்சார் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவை அடங்கும். முன்பக்கதில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா வசதி இருக்கிறது. அதோடு செல்பி கேமரா காட்சிக்கு மேல்இடது மூலையில் துளை பஞ்ச் கட் அவுட் வழங்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 6 5ஜி சாதனத்தில் வைஃபை 6, ப்ளூடூத் வி5.2, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகள் உள்ளது. பாதுகாப்பு அம்சத்திற்கு சாதனத்தில் இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் அம்சம் இருக்கிறது. 65 வாட்ஸ் சூப்பர் வூக் சார்ஜிங் ஆதரவோடு 4300 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 6 5G Smartphones Pre booking Starts in India: Here the Sale Date

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X