Home
Mobile

ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியுடன் அறிமுகமான ஒப்போ ரெனோ 6 4ஜி ஸ்மார்ட்போன்.!

ஒப்போ நிறுவனம் ஏற்கனவே ஒப்போ ரெனோ 6 மற்றும் ஒப்போ ரெனோ 6 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள நிலையில், தற்போது ஒப்போ ரெனோ 6 4ஜி ஸ்மார்ட்போனை இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 5ஜி ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ரெனோ 6 4ஜி ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியுடன் அறிமுகமான ஒப்போ ரெனோ 6 4ஜி

விரைவில் இந்த ஒப்போ ரெனோ 6 4ஜி சாதனம் ஆனது அனைத்து சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த புதிய சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 6 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 2400×1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 430 நிட்ஸ் ப்ரைட்னஸ், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ரெனோ 6 4ஜி ஸ்மார்ட்போனில் தரமான குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படுத்த முடியும். மேலும் ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

ஒப்போ ரெனோ 6 4ஜி சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி மோனோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
44எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் Stellar Black மற்றும் Aurora நிறங்களில் இந்த புதிய சாதனம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

ஒப்போ ரெனோ 6 4ஜி ஸ்மார்ட்போனில் 4310எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ரெனோ 6 4ஜி சாதனத்தில் இரட்டை சிம், 4 ஜி, வைஃபை, புளூடூத் 5.1, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், பீடோ, க்ளோனாஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன.

மேலும் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ரெனோ 6 4ஜி ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.26,705-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 6 4G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X