ஜனவரி 18 இல் களமிறங்கும் ஒப்போ ரெனோ 5 ப்ரோ: அற்புதமான அம்சங்கள்!
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி குவாட் கேமரா அமைப்பு, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்ட அம்சத்தோடு அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஜனவரி 18ஆம் தேதி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என ஒப்போ நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த வெளியீட்டு தேதியானது ஒப்போ டுவிட்டர் பக்கத்திலும், பிளிப்கார்ட்டிலும் வெளிப்படுத்தியுள்ளது.

ஜனவரி 18 ஆம் தேதி அறிமுகம்
ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி வெளியீடு ஜனவரி 18 ஆம் தேதி மதியம் 12.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் 5ஜி உலகின் அடுத்த சிறந்த விஷயத்தை அனுபவிக்கத் தயாரா, 5ஜி இணைப்பு, எதிர்கால வீடியோகிராஃபி திறன் உள்ளிட்ட அற்புதமான அம்சங்களோடு ஒப்போ ரெனோ 5ப்ரோ. என பதிவிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
ஒப்போ ரெனோ 5 மற்றும் ரெனோ 5 ப்ரோ 5ஜி பின்புற குவாட் கேமரா அமைப்பு, ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 32 மெகாபிக்சல் செல்பி கேமரா, பாதுகாப்பு அம்சத்திற்கு இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சாருடன் அறிமுகம் செய்தது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்சேமிப்பு
ஒப்போ ரெனோ 5 ப்ரோ சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது ஓஎல்இடி டிஸ்ப்ளே, 2400 ×1080 பிக்சல்கள் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதிப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியுடன் வருகிறது.

64 மெகாபிக்சல் பிரதான கேமரா
இந்த ஸ்மார்ட்போனானது இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 மூலம் இயக்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 5 ப்ரோ 4350 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் சூப்பர் ப்ளாஷ் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா இருக்கிறது. மேலும் இதன் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது.


Click it and Unblock the Notifications