ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.! முழு விவரங்கள்.!
ஒப்போ நிறுவனம் புதிய ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் மாடலை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்நிறுவனம் ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனின் விலைப் பற்றிய தகவலை வெளியிடவில்லை. இப்போது இந்த சாதனத்தின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 × 1080 பிக்சல் தீர்மானம், 90Hz refresh rate, 20:9 என்ற திரைவிகிதம், 80Hz touch sampling rate உள்ளிட்டபல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி எஸ்ஒசி சிப்செட் வசதி உடன் அட்ரினோ 619 ஜிபியு வசதி இடம்பெற்றுள்ளது. எனவே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இன் டிஸ்பிளே கைரேகைசென்சார், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் இவற்றுள் அடக்கம்.

64எம்பி பிரைமரி லென்ஸ்
ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 32எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு
அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4300எம்ஏஎச் பேட்டரி
ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போனில் 4300எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

8ஜிபி/12ஜிபி ரேம்
ஒப்போ ரெனோ 5கே ஸ்மார்ட்போன் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது. பின்பு க்ரீன் ப்ரீஸ், மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்டாரி ட்ரீம் உள்ளிட்ட நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5, ஜிபிஎஸ், என்எப்சி, இரட்டை சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








