Home
Mobile

48எம்பி கேமராவுடன் ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!

ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன் மாடலை கென்யாவில் அறிமுகம் செய்துள்ளது ஒப்போ நிறுவனம். மேலும் நான்கு பின்புற கேமராக்கள், அசத்தலான சிப்செட், இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் மற்றும் பல்வேறு அருமையான ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 5 எஃப்

ஒப்போ ரெனோ 5 எஃப்

ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.43-இன்ச் எப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
பின்பு 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 60Hz refresh rate, மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட்

ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் IMG 9XM-HP8 GPU வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 11 (ColorOS 11.1) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

48எம்பி பிரைமரி கேமரா

48எம்பி பிரைமரி கேமரா

ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு 32 எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 8ஜிபி ரேம் மற்றும்

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் வழங்கப்படும். மேலும் ஊதா மறறும் கருப்பு நிறங்களில் வெளிவந்துள்ளது ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன் மாடல்.

 30W VOOC  சார்ஜிங் ஆதரவு

30W VOOC சார்ஜிங் ஆதரவு

ஒப்போ ரெனோ 5 எஃப் சாதனத்தில் 4310 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. பின்பு 30W VOOC சார்ஜிங் ஆதரவு மற்றும் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்டபல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் 172 கிராம் எடையைக் கொண்டுள்ளது ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போன்.

128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ரெனோ 5 எஃப் ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.20,800-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 5F Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X