ரெனோ 5 ப்ரோ அறிமுகத்திற்கு ரெடி ஆகும் இந்தியா..? ரெனோ 5 லைட் அறிமுகத்திற்கு ரெடியாகும் சீனா..
இந்திய சந்தையில் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதற்கான தகவல்கள் இணையதளத்தில் பரவி வரும் நிலையில், சீனாவில் ரெனோ 5 தொடரின் கீழ் புதிதாக ஒரு சாதனம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் விரைவில் ரெனோ 5 சீரிஸ் தொடரில் சேரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ரெனோ 5 லைட் என்று அழைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

ரெனோ 5 லைட்
இந்த சாதனம் சீனாவின் 3 சி இணையதளத்தில் PELM00 என்ற மாடல் எண்ணைக் கொண்டு கண்டறியப்பட்டுள்ளது. சாதனத்துடன் வரவிருக்கும் சார்ஜர் பற்றிய தகவலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரெனோ 5 லைட் சார்ஜ்ர் 30W VOOC 4.0 சார்ஜர் உடன் கூடிய மாடல் எண் VC56HACH உடன் காணப்பட்டுள்ளது. இந்த சாதனம் 30W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ரெனோ 5 சீரிஸ்
சாதனத்திற்கான பெயர் உறுதிப்படுத்தப்படாத நிலையில், MyFixGuide கணிப்பின்படி, இந்த புதிய ரெனோ 5 சீரிஸ் ஸ்மார்ட்போன் சாதனம் ரெனோ 5 லைட் வெர்ஷனாக இருக்க கூடும் என்று தெரிவித்துள்ளது. ரெனோ 5 சீரிஸ் தொடரின் கீழ் வெளியிடப்பட்ட மற்ற 3 ஸ்மார்ட்போன் மாடல்களுடன் இது இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற ரெனோ 5 மாடல்களுடன் ஒப்பிடும்போது லைட் வெர்ஷனில் சில அம்சங்கள் குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன்
சமீபத்தில் ரெனோ 5 தொடரின் சாதனங்களில் ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் பிஐஎஸ் இணையதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, இந்த சாதனம் விரைவில் இந்தியாவிலும் அறிமுகமும் என்பதை இது குறிக்கிறது. இதன் முக்கிய சிறப்பம்ச தகவல்களும் இணையத்தில் வெளியாகியுள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள சிறப்பம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனை நாம் எதிர்பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ சிறப்பம்சம்
- 6.55' இன்ச் 2400 × 1080 பிக்சல் கொண்ட வளைந்த கர்வுடு OLED டிஸ்பிளே
- 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 120 ஹெர்ட்ஸ் தொடு மாதிரி வீதம்
- மாலி-ஜி 77 எம்சி 9 ஜி.பீ.யு
- மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட்
- கலர்ஓஎஸ் 11.1 உடன் ஆண்ட்ராய்டு 11
- 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 2- மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
- 2 மெகாபிக்சல் மோனோ போர்ட்ரெய்ட் லென்ஸ்
- 32 மெகாபிக்சல் செல்பி கேமரா
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- 65W சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்
- 4350 எம்ஏஎச் பேட்டரி



Click it and Unblock the Notifications








