ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி: அம்சம் எல்லாம் ரொம்ப ஒஸ்தி- விலை தெரியுமா?

|

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி, குவாட் கேமரா அமைப்புடன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் மற்றும் விலை குறித்து பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ

ஒப்போ ரெனோ 5 ப்ரோ

ஒப்போ ரெனோ 5 ப்ரோ கடந்த மாதம் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் அஸ்ட்ரல் ப்ளூ மற்றும் ஸ்டாரி பிளாக் வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனை ஜனவரி 22 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட்டில் வாங்கலாம். மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி, 4350 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட்ஸ் வேக சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி விலை

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி விலை

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி விலை குறித்து பார்க்கையில், இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.35,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 22 முதல் ஒப்போ ஆஃப்லைன், ஆன்லைன் ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் மூலமாக விற்பனைக்கு கிடைக்கும். அதேபோல் எச்டிஎஃப்சி வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கார்டுகளுக்கு கேஷ்பேக் வழங்கப்படும். அதேபோல் பேங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்ட்கள் மூலம் இஎம்ஐ பரிவர்த்தனையில் ரூ.2500 கேஷ்பேக் கிடைக்கும்.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ அம்சங்கள்

ஒப்போ ரெனோ 5 ப்ரோ அம்சங்கள்

ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் உள்ளிட்டவைகளுடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000 ப்ளஸ் எஸ்ஓசி-ஐ கொண்டிருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, இரட்டை சிம் கார்ட்களுடன் வருகிறது.

கேமரா அம்சங்கள்

கேமரா அம்சங்கள்

ஒப்போ ரெனோ 5 ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா கொண்டிருக்கிறது. பஞ்ச் கட்அவுட் அமைப்புடன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள்

ஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள்

ஒப்போ ரெனோ 5 ப்ரோ இணைப்பு ஆதரவுகள் குறித்து பார்க்கையில், இதில் டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, பாதுகாப்பு அம்சத்திற்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளிட்டவைகள் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4350 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவு உள்ளிட்டவைகள் உள்ளன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 5 Pro 5G Smartphone Launched in India With MediaTek Dimensity 1000+ SoC and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X