மிரட்டலான Oppo Reno 5 Pro 5G போனின் விற்பனை இன்று துவக்கம்.. விலை என்ன தெரியுமா?

|

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி (Oppo Reno 5 Pro 5G) ஸ்மார்ட்போன் மாடலை இன்று விற்பனைக்காக அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை முழுமையாகப் பார்க்கலாம்.

Oppo Reno 5 Pro 5G இன்று விற்பனை

Oppo Reno 5 Pro 5G இன்று விற்பனை

ஒப்போ வழங்கும் முதன்மை ஸ்மார்ட்போன் இந்த வார தொடக்கத்தில் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் 20: 9 டிஸ்பிளேவுடன் வருகிறது. ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட் உடன் கூடிய 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஒப்போ நிறுவனம் இன்று இந்த ஸ்மார்ட்போனின் விற்பனையைத் துவங்குகிறது.

விலை என்ன?

விலை என்ன?

இந்தியாவில் ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு ரூ. 35,990 என்ற விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட், ஒப்போ இந்தியா இ-ஸ்டோர் மற்றும் பிக் சி, குரோமா, ரிலையன்ஸ் டிஜிட்டல், மற்றும் சங்கீதா உள்ளிட்ட சில்லறை விற்பனையாளர்கள் மூலம் இன்று மதியம் 12 மணி (நண்பகல்) முதல் விற்பனைக்கு வருகிறது.

தினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா? அப்போ, இதுதான் சரியான திட்டம்..தினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா? அப்போ, இதுதான் சரியான திட்டம்..

ஆரம்ப கால விற்பனையின் சலுகை விபரம்

ஆரம்ப கால விற்பனையின் சலுகை விபரம்

அஸ்டரல் ப்ளூ மற்றும் ஸ்டார்ரி பிளாக் வண்ண விருப்பத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது. HDFC மற்றும் ICICI வங்கி அட்டைகளுக்கு 10% உடனடி கேஷ்பேக் சலுகை, Paytm மூலம் 11% இன்ஸ்டன்ட் கேஷ்பேக், Bank of Baroda வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,500 வரை கேஷ்பேக் சலுகை, வட்டி இல்லாத EMI விருப்பம், ஜீரோ டவுன் பேமெண்ட் வசதி என்று இன்னும் பல சலுகைகள் இந்த ஆரம்பக்கால விற்பனையில் கிடைக்கிறது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி சிறப்பம்சம்

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5 ஜி சிறப்பம்சம்

 • 6.55' இன்ச் 1,080x2,400 பிக்சல்கள் கொண்ட முழு எச்டி பிளஸ் OLED டிஸ்பிளே
 • ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ சிப்செட்
 • 8 ஜிபி எல்பிடிடிஆர் 4 எக்ஸ் ரேம்
 • 128 ஜிபி யுஎஃப்எஸ் 2.1 சேமிப்பு
 • மைக்ரோ எஸ்டி கார்டு கிடையாது
 • ஆண்ட்ராய்டு 11உடன் கூடிய கலர்ஓஎஸ் 11
 • ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..ATM பயனர்களே உஷார்.. பணம் எடுக்க போறீங்களா? இனி இது நடந்தால் GST உடன் கட்டணம் வசூலிக்கப்படும்..

  குவாட் கேமரா அமைப்பு

  குவாட் கேமரா அமைப்பு

  • 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா
  • 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார்
  • 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
  • 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் சென்சார்
  • 32 மெகாபிக்சல் ஸ்னாப்பர்
  • டிஸ்பிளே கைரேகை சென்சார்
  • பேட்டரி
   • 5 ஜி மற்றும் 4 ஜி எல்டிஇ
   • வைஃபை 6
   • புளூடூத் 5.1
   • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
   • என்எப்சி
   • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
   • 65W SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங்
   • 4,350mAh பேட்டரி

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 5 Pro 5G Sale Starts in India Today: Know The Price, Offers and Specifications : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X