ஒப்போ ரெனோ 5, ரெனோ 5 ப்ரோ அறிமுகம்: 5ஜி, 8 ஜிபி ரேம், 64 எம்பி கேமரா!
ஒப்போ ரெனோ 5 5ஜி பிளாட் டிஸ்ப்ளேவுடனும், ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி வளைந்த டிஸ்ப்ளேவுடனும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 5 5ஜி, ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போன்கள் ஆக்டோ கோர் சிப்செட், குவாட் ரியர் கேமரா அமைப்பு மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட அட்டகாச அம்சங்களோடு அறிமுகமாகியுள்ளது.
ஒப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதியோடு சிஎன்ஒய் 2,699 என்ற விலையில் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.30,400 ஆகும். அதேபோல் 12 ஜிபி மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போனின் விலை சிஎன்ஒய் 2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.33,700 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் அரோரா ப்ளூ, மூன்லைட் நைட் உள்ளிட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனானது 8 ஜிபி மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் சிஎன்ஒய் 3,399 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு ரூ.38,200 ஆகும். அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை சிஎன்ஒய் 3,799 ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.42,700 ஆகும். இந்த ஸ்மார்ட்போனும் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
ஒப்போ ரெனோ 5 5ஜி சிறப்பம்சங்கள்
ஒப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இது ஆண்ட்ராய்டு 11 மூலம் கலர் ஓஎஸ் 11.1 மூலம் இயக்கப்படுகிறது. இதில் இரட்டை நானோ சிம் ஆதரவு உள்ளது. இதில் 6.43 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 765 ஜி எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 5 5ஜி பொருத்தவரை இதில் குவாட் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரண்டு 2 மெகாபிக்சல் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஒப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போனில் 4300 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதில் 65 வாட்ஸ் அதிவேக சார்ஜிங் ஆதரவு இருக்கிறது. பாதுகாப்பு வசதிக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உள்ளது. ஒப்போ ரெனோ 5 5ஜி ஸ்மார்ட்போனின் சர்வதேச விற்பனை குறித்த விவரம் தற்போதுவரை வெளியாகவில்லை.

ஒப்போ ரெனோ 5 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் ஆண்ட்ராய்டு 11 கலர் ஓஸ் 11.1 உடன் இயக்கப்படுகிறது. இதில் 6.55 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இதில் மீடியாடெக் டைமன்சிட்டி 1000+ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
இதில் 4350 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. கேமரா அம்சங்களை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போனில் ஒப்போ ரெனோ 5 5ஜி போன்ற அதே ஆதரவுகள் உள்ளது.
File Images


Click it and Unblock the Notifications