Home
Mobile

48எம்பி கேமராவுடன் ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை எவ்வளவு தெரியுமா?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன் மாடலை இந்தோனேசியாவில் அறிமுகம் செய்துள்ளது. அருமையான வடிவமைப்பு, நான்கு ரியர் கேமராக்கள், சிறந்த மென்பொருள் வசதி என பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன் ஆனது மேட் பிளாக் மற்றும் மெட்டாலிக் ஒயிட் என இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பாதுகாப்புடன் பயன்படுத்த முடியும்.

 பிளஸ் AMOLED டிஸ்பிளே

ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. மேலும்2400 x 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 180Hz touch sampling rate உள்ளிட்ட வசதிகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக வீடியோ கேம் விளையாடுவதற்கும் மற்றும் திரைப்படங்கள் பார்ப்பதற்கும் இதன் டிஸ்பிளே மிகவும் அருமையாக இருக்கும்.

ஸ்மார்ட்போனின் இதயம்

ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போனின் இதயம் பற்றி பேசுகையில் அதாவது இதன் மென்பொருள் அமைப்பு பற்றி பேசுகையில் மீடியாடெக் ஹீலியோ பி95 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாதனம். பின்பு ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான ColorOS 7.2 கொண்டு இயங்குகிறது இந்த ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போன்.

இணைப்பு ஆதரவுகளை

வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி, யுஎஸ்பி-டைப் சி, 3.5எம்எம் ஹெட்போன் ஸ்லாட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

செல்பீ கேமராகள் இவற்றுள் அடக்கம்

ஒப்போ ரெனோ 4எஃப் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைட் லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் டூயல் செல்பீ கேமரா ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதன்படி 16எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என இரண்டு செல்பீ கேமராகள் இவற்றுள் அடக்கம்.

மதிப்பில் இந்த ஸ்மார்ட்போனின்

இந்தோனேசியாவில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரேனோ 4எஃப் ஸ்மார்ட்போனின் விலை IDR 4,299,000- ஆக உள்ளது. இந்திய மதிப்பில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,500-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 4F Launched: Specs, Features and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X