48 எம்பி கேமராவோடு ஒப்போ ரெனோ 4 எஸ்இ: விலை மற்றம் சிறப்பம்சங்கள்!

|

ஒப்போ ரெனோ 4 எஸ்இ மீடியாடெக் டைமன்சிட்டி 720 எஸ்ஓசி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, மேலும் 8 ஜிபி ரேம் பவர், 48 எம்பி பிரதான கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களோடு வருகிறது.

ரெனோ 4 சீரிஸ் தொடர்

ரெனோ 4 சீரிஸ் தொடர்

ஒப்போ நிறுவனம் சமீபத்தில் ரெனோ 4 சீரிஸ் தொடரின் புதிய ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போனானது ஒப்போ ரெனோ 4 எஸ்இ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ சீரிஸ்-ல், ரெனோ 4, ரெனோ 4 ப்ரோ, ரெனோ 4 ப்ரோ ஆர்ட்டிஸ்ட் லிமிட்டெட் பதிப்பின் உள்ளடக்கிய தொடராக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.

8 ஜிபி ரேம் அம்சம்

8 ஜிபி ரேம் அம்சம்

ஒப்போ ரெனோ 4 எஸ்இ 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் 2,499 யுவான் இந்திய விலை மதிப்பின்படி ரூ.27,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை 2,799 யுவான் இந்திய விலை மதிப்பில் ரூ.30,400 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது சூப்பர் ஃப்ளாஷ் பிளாக், சூப்பர் ஃப்ளாஷ் ப்ளூ மற்றும் சூப்பர் ஃப்ளாஷ் வெள்ளை ஆகிய வண்ணங்களில் வருகிறது.

ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்

ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 6.43 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே 2400x1080 பிக்சல் திரை தெளிவுத்திறன் உள்ளிட்ட அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4300 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட்ஸ் சூப்பர் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

அடடா., கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடிலும் இந்த அம்சம் இருக்கா?- இதை மட்டும் செய்தால் போதும்!அடடா., கூகுள் டாக்ஸ், ஷீட்ஸ், ஸ்லைடிலும் இந்த அம்சம் இருக்கா?- இதை மட்டும் செய்தால் போதும்!

மீடியாடெக் டைமன்சிட்டி 720 சிப்செட்

மீடியாடெக் டைமன்சிட்டி 720 சிப்செட்

ஒப்போ ரெனோ 4 எஸ்இ ஸ்மார்ட்போனானது மீடியாடெக் டைமன்சிட்டி 720 சிப்செட் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு இருக்கிறது. இந்த போனானது குவாட் ரியர் கேமரா அமைப்பை கொண்டுள்ளது.

48 எம்பி பிரதான கேமரா

48 எம்பி பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 48 எம்பி பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் எல்இடி ப்ளாஷ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. செல்பி கேமரா முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் வசதி பொருத்தப்பட்டுள்ளது.

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்

ஒப்போ ரெனோ 4 எஸ்இ 169 கிராம் எடை கொண்டது. அதோடு இதில் பாதுகாப்பு அம்சங்களுக்காக இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு இரட்டை 4 ஜி அம்சம் யூ.எஸ்.பி-சி போர்ட் உள்ளிட்ட அம்சங்கள் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 4 Se Announced With 8 GB RAM, 48MP Camera: Here The Price and Features

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X