Home
Mobile

இன்று விற்பனைக்கு வரும் ஒப்போ ரேனோ 4ப்ரோ.! விலை மற்றும் விபரங்கள்.!

மிகவும் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது இன்று விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடலை அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால், ஆஃப்லைன் ஸ்டோர் என பல்வேறு தளங்களில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம்
சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை ரூ.34,990-ஆக உள்ளது

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,990-ஆக உள்ளது, பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கினால் 10சதவிகிதம் கேஷ்பேக் சலுகை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இஎம்ஐ வசதி கூட இந்த ஸ்மார்ட்போன் மாடலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 4ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது

ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 1100nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்போனில் மகிவும் எதிர்பார்க்கப்பட்ட

இந்த ஸ்மார்ட்போனில் மகிவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி

ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

எம்பி வைடு ஆங்க

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கல் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

4000எம்ஏஎச் பேட்டரி

ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 65வாட் SuperVOOC 2.0 பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி, புளூடூத்

இரட்டை 4ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 4 Pro Sale Starts Today In India Price Offers And More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X