அசத்தலான ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

|

ஒப்போ நிறுவனம் இன்று மிகவும் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அசத்தலான சிப்செட் வசதி மற்றும் நான்கு ரியர் கேமரா ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களை விரிவாகப் பார்ப்போம்.

ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது

ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 6.55-இன்ச் முழு எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 1100nits பிரைட்நஸ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட

இந்த ஸ்மார்ட்போனில் மகிவும் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அடடா., 4ஜி ஆதரவோடு Jio phone 5: மொபைல் விலையே ரூ.500-க்கு குறைவுதான்!

ஸ்மார்ட்போனில் 8ஜிபி

ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கல்

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி வைடு ஆங்கல் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளட்ட பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

65-இன்ச் நோக்கியா ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போனில்

ஒப்போ ரெனோ 4ப்ரோ ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 65வாட் SuperVOOC 2.0 பாஸ்ட்

சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் இன் டிஸ்பிளே கைரேகை சென்சார் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும்

இரட்டை 4ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.1, ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பீடோ, என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.34,990-ஆக உள்ளது. வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 4 Pro Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X