வருகிற 5 ஆம் தேதி அறிமுகம்: அட்டகாச அம்சங்களோடு ஒப்போ ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ!
ஒப்போ நிறுவனத்தின் ரெனோ தொடரின் புதுமாடல் ஸ்மார்ட்போன் வருகிற ஐந்தாம் தேதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் பல்வேறு சிறப்பம்சங்களோடு வெளியாகவுள்ளது.

பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம்
சீனாவை தளமாகக் கொண்ட பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ., தங்களது மாறுபட்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ச்சியாக சந்தையில் அறிமுகப்படுத்திக் கொண்டே வருகிறது. சியோமி இந்தியாவில் பல்வேறு வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இந்தியாவில் தனக்கென தனி சந்தையையே உருவாக்கி உள்ளது. இவற்றுடன் கடுமையான போட்டியில் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரெனோ தொடர் ஸ்மார்ட்போன்கள்
இதையடுத்து ஒப்போ நிறுவனம் தங்களது ரெனோ தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. ஒப்போ நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களோடு ரெனோ 4 மற்றும் ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது வருகிற 5 ஆம் தேதி சீனாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம்
புதிய மாடல் ஸ்மார்ட்போன் அறிமுகம் குறித்து அதிகாரப்பூர்வ தளம் உறுதிப்படுத்தி உள்ளது. அதோடு இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் முன்னதாகவே ஆன்லைனில் கசிந்தது. அதுமட்டுமின்றி புதிய மாடல் ஸ்மார்ட்போனின் வெளியீட்டுத் தேதி தொடர்பான டீஸர் ஒன்றின் மூலமும் அதிகாரப்பூர்வ தளம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போன் டிஸ்ப்ளே
ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போனில் 6.80 இன்ச் டிஸ்ப்ளே வசதியும் 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானமும் உள்ளது. அதோடு இந்த டிஸ்ப்ளேயில் ஒரு அமோல்ட் டிசைன் கொண்டுள்ளது. அதோடு இதன் காட்சியில் 409ppi பிக்சல் தீர்மானமும் உள்ளது.

ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போன் செயலி
இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி செயலி மூலம் இயக்கப்படுகிறது. அதோடு ஆண்ட்ராய்டு 10 ஆதரவின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 8 ஜிபி ரேம் மற்றும் 12 ஜிபி ரேம் வேரியண்ட் வசதியோடு கிடைக்கிறது. அதோடு 128 ஜிபி மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியோடு வருகிறது.

ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போன் கேமரா வடிவமைப்பு
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று பின்புற கேமரா அமைப்பு உள்ளது. பிரதான கேமரா 48 மெகாபிக்சல் சென்சார், இரண்டாவது கேமரா 8 மெகாபிக்சல் மற்றும் மூன்றாவது கேமரா 2 மெகாபிக்சல் சென்சார் ஆகும். இதில் 32 மெகாபிக்சல் சென்சார் திறன் கொண்ட செல்பி கேமரா இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 4 ஸ்மார்ட்போன் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பேக்-அப் உள்ளது எனவும் 65W வேகமான சார்ஜிங் ஆதரவு இதில் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ், என்.எஃப்.சி ஆகியவை உள்ளது என தகவல்கள் தெரிவித்தாலும் இதன் அதிகாரப்பூர்வ விலை தெரிவிக்கப்படவில்லை.

ஒப்போ ரெனோ 4 ப்ரோ ஸ்மார்ட்போன்
இந்த மாடலை பொருத்தவரை 6.55 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 10 மூலம் இந்த போன் இயக்கப்படுகிறது. ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. பிரதான கேமராவாக 48 மெகாபிக்சல் சென்சார், இரண்டாவது கேமராவாக 12 மெகாபிக்சல் சென்சார் மற்றும் மூன்றாவது கேமராவாக 13 மெகாபிக்சல் சென்சார் ஆகியவை அடங்கும். அதோடு 32 மெகாபிக்சல் சென்சார் திறன் கொண்ட செல்ஃபி கேமராவும் இதில் உள்ளது.

4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி
இந்த ஸ்மார்ட்போன் 4,000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி பேக்-அப்., 65W வேகமான சார்ஜிங் வசதியும் இதில் ஆதரிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை குறித்த தகவல் தற்போது வரை வளியாகவில்லை.


Click it and Unblock the Notifications








