48எம்பி கேமராவுடன் ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!
ஜப்பானிய சந்தையில் ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரேனோ 3ஏ ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, விரைவில் இந்தியாவிலும் இந்த ஒப்போ ரேனோ 3ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக
வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 665பிராசஸர்
ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 665பிராசஸர் வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

128ஜிபி உள்ளடக்க மெமரி
இந்த ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்தத ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்+ 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம்.

ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

இரட்டை சிம், 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ரெனோ 3ஏ ஸ்மார்ட்போன் மாடலின் இந்திய விலை மதிப்பு ரூ.28,152-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications