இந்தியா: 44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் களமிறங்கும் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன்.!
கடந்த மாதம் சீனாவில் ஒப்போ நிறுவனம் தனது ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் ஒப்போ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என 91மொபைல்ஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளன.

அட்டகாசமான டிஸ்பிளே வசதி
ஒப்ரோ ரேனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2400 × 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

44எம்பி டூயல் செல்பி கேமரா
இந்தியாவில் அறிமுகமாகும் ஒப்ரோ ரேனோ 3ப்ரோ ஆனது 48 எம்.பி (எஃப் / 1.7) பிரதான கேமரா + 2 எக்ஸ் ஆப்டிகல் ஸூம் கொண்ட 13 எம்.பி (எஃப் / 2.4) டெலிஃபோட்டோ லென்ஸ் + 8 எம்.பி (எஃப்/2.2) அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் + 2எம்பி (எஃப் / 2.4) மோனோக்ரோம் சென்சார் ஆகியவற்றை கொண்ட க்வாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. பின்பு செல்பீ வீடியோ காலிங் மற்றும் ஃபேஸ் அன்லாக் ஆகியவற்றிக்காக 44எம்பி டூயல் செல்பி கேமராவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம்.

8ஜிபி/12ஜிபி ரேம்
இந்த ஸ்மார்ட்போனில் எதிர்பார்த்தபடி 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்னாப்டிராகன் 765 ஜி
வெளிவந்த தகவலின் அடிப்படையில் இந்தியாவில் வெளியாகும் ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடலில் ஸ்னாப்டிராகன் 765 ஜி சிப்செட் இடம்பெறாது, அதைவிட சிறந்த சிப்செட் வசதி இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக
ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன்.

4025எம்ஏஎச் பேட்டரி
இந்த ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடலில் 4025எம்ஏஎச் பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது, பின்பு வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள்ளஅடக்கம்.

வெளியான தகவலின் அடிப்படையில் 12ஜிபி ரேம் கொண்ட ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடல் ரூ.45,000-விலையிலும்,8ஜிபி ரேம் கொண்ட ஒப்ரோ ரேனோ 3ப்ரோ மாடல் ரூ.40,000-விலையிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications