Home
Mobile

44எம்பி டூயல் செல்பீ கேமராவுடன் அட்டகாசமான ஒப்போ ரெனோ 3ப்ரோ அறிமுகம்.!

ஒப்போ நிறுவனம் இந்தியாவில் தனது ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த சாதனம் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் தளங்களில் வரும் மார்ச் 6-ம் தேதி விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 3ப்ரோ

ஒப்போ ரெனோ 3ப்ரோ

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10(ColorOS 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி

ஒப்போ ரெனோ 3ப்ரோ சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

4025எம்ஏஎச் பேட்டரி

4025எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்;மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் வசதி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு, ப்ளூடூத், உள்ளிட்ட பல்வேறு இணைப்புஆதரவுகள் அடக்கம். மேலும் 175கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது, அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,990-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 3 Pro with 44MP dual selfie cameras launched in India and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X