இந்தியா: வந்தது டூயல் செல்பீ கேமரா கொண்ட Oppo Reno 3 Pro..!
இந்தியாவில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது விற்பனைக்கு வந்துள்ளது, குறிப்பாக ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 சதவீத கேஷ்பேக்
மேலும் இந்த சமீபத்திய ரெனோ ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு 10 சதவீத கேஷ்பேக் மற்றும் கூடுதலாக, 1,000 அதிர்ஷ்டசாலிகளுக்கு ஸ்மார்ட்போனுடன் இலவசமாக ஒப்போ என்கோ போன்ற அறிமுக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 3ப்ரோ
ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 10
இந்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10(ColorOS 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி
ஒப்போ ரெனோ 3ப்ரோ சாதனத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா
ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

4025எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்;மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் வசதி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு, ப்ளூடூத், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 175கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒப்போ ரெனோ 3ப்ரோ விலை
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.29,990-ஆக உள்ளது, அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,990-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications