அதிரடி விலைக்குறைப்பு: அட்டகாச அம்சங்கள் கொண்ட ஓப்போ ரெனோ 3 ப்ரோ!

|

பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஓப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஓப்போ ரெனோ 3 ப்ரோ

ஓப்போ ரெனோ 3 ப்ரோ

ஓப்போ ரெனோ 3 ப்ரோ கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் 128 ஜிபி சேமிப்பு மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி சேமிப்பு வேரியண்ட் என கிடைக்கிறது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை

ஓப்போ ரெனோ 3 ப்ரோ இந்தியாவில் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.27,990 என்ற விலையிலும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விலை ரூ.29,990 ஆக கிடைக்கிறது. 128 ஜிபி சேமிப்பு கொண்ட ஸ்மார்ட்போன் முன்னதாக ரூ.29,900-க்கு கிடைத்தது தற்போது ரூ.2000 விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 256 ஜிபி சேமிப்பு வசதி கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.32,990-க்கு கிடைக்கிறது. தற்போது இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

128 ஜிபி சேமிப்பு விலை

128 ஜிபி சேமிப்பு விலை

ஓப்போ ரெனை 3 ப்ரோ மார்ச் மாதம் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.29,900-க்கும், 256 ஜிபி சேமிப்பு விலை ரூ.32,990-க்கும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு ஏப்ரல் மாதத்தில் ஜிஎஸ்டி அறிவிப்பின் காரணமாக 128 ஜிபி சேமிப்புக்கு ரூ.2000 விலை உயர்வு அறிவிக்கப்பட்டு ரூ.31,900 என நிர்ணயிக்கப்பட்டது.

6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது.

SBI முக்கிய அறிவிப்பு: ஏடிஎம் பயன்பாட்டுக்கு இந்த 10 கொள்கை முக்கியம்!

மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி

மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10(ColorOS 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விற்பனைக்கு வருகிறது.

64 எம்பி பிரைமரி

64 எம்பி பிரைமரி

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

4025 எம்ஏஎச் பேட்டரி

4025 எம்ஏஎச் பேட்டரி

4025எம்ஏஎச் பேட்டரி இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

 இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்

ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் வசதி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு, ப்ளூடூத், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 175கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oppo Reno 3 Pro Gets Price Cut in India Here the Specification and Price!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X