அதிரடி விலைக்குறைப்பு: 8ஜிபி ரேம், இரட்டை செல்பி கேமராவோடு ஒப்போ ரெனோ 3 ப்ரோ- விலை எவ்வளவு தெரியுமா?
ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு இந்தியாவில் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரட்டை செல்பி கேமரா, 8 ஜிபி ரேம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டது.

ஒப்போ ரெனோ 3 ப்ரோ விலைக்குறைப்பு
ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை குறைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் மாதம் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும்போது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.29,990 ஆகவும் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு விலை ரூ.32,990 ஆகவும் நிர்ணியிக்கப்பட்டிருந்தது. இப்போது விலைக்குறைப்பை சந்தித்துள்ளது. ஜிஎஸ்டியுடன் இந்த 128 ஜிபி சேமிப்பு ஸ்மார்ட்போன் ரூ.31,990 மற்றும் 256 ஜிபி சேமிப்பு ரூ.34,990 ஆகவும் இருந்தது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு
ஒப்போ ரெனோ 3 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.2000 விலைக்குறைப்பை சந்தித்துள்ளது. இதன்மூலம் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.25,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை அமேசானில் பட்டியிலடப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பு வசதி விலை ரூ.29,990 ஆக உள்ளது.

6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்ப்ளே
ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டது, பின்பு 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டது.

ஆண்ட்ராய்டு 10
இந்த ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனில மீடியாடெக் ஹீலியோ பி95 பிராசஸர் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்ட்ராய்டு 10(கலர் ஓஎஸ் 7) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது இந்த ஸ்மார்ட்போன்.

44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமரா
ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 44எம்பி + 2எம்பி டூயல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

4025எம்ஏஎச் பேட்டரி
இந்த ஸ்மார்ட்போனில் 4025எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் அடக்கம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் வீடியோ கேம் மற்றும் வீடியோ போன்ற பல்வேறு வசதிகளுக்கு மிகவும் அருமையாக பயன்படும்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
ஒப்போ ரெனோ 3ப்ரோ ஸ்;மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் வெளிவந்துள்ளது, குறிப்பாக இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பேஸ் அன்லாக் வசதி, உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்
இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், டூயல்-சிம் ஆதரவு, ப்ளூடூத், உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம். மேலும் 175கிராம் எடை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications