புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு!
ஒப்போ நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த புதிய ஒப்போ ரெனோ 2இசெட்(2z)மற்றும் ஒப்போ ரெனோ 2எப்(2f) ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது. குறிப்பாக விலைகுறைக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் மாடல்களை அமேசான் வலைதளத்தில் வாங்க முடியும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 2இசெட்(2z)விலைகுறைப்பு
ஒப்போ ரெனோ 2இசெட்(2z) ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.29,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டுரூ.27,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்போ ரெனோ 2எப்(2f) விலைகுறைப்பு
ஒப்போ ரெனோ 2எப்(2f) ஸ்மார்ட்போன் மாடலின் முந்தைய விலை ரூ.25,990-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டுரூ.23,990-விலையில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு சாதனங்களின் சிறப்பம்சங்களைப்
பார்ப்போம்.

ஒப்போ ரெனோ 2இசெட்-சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.53-இன்ச் AMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
காரினிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி90
மெமரி: 256ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜிங்: VOOC 3.0 ஆதரவு

ஒப்போ ரெனோ 2எப்-சிறப்பம்சங்கள்
டிஸ்பிளே: 6.53-இன்சAMOLED முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
சிப்செட்: மீடியாடெக் ஹீலியோ பி70
மெமரி: 128ஜிபி
ரேம்: 8ஜிபி
ரியர் கேமரா: 48எம்பி+8எம்பி+2எம்பி+2எம்பி
செல்பீ கேமரா: 16எம்பி
இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 9 பை அடிப்படையிலான கலர்ஒஎஸ் 6.1
பேட்டரி: 4000எம்ஏஎச்
பாஸ்ட் சார்ஜிங்: vooc3.0 ஆதரவு


Click it and Unblock the Notifications








