இது வந்தா மட்டும் போதும்.. 7200mAh பேட்டரி.. 50MP பெரிஸ்கோப்.. 12GB ரேம்.. 512GB மெமரி.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் வைத்திருக்கும் ஓப்போ ரெனோ 17 சீரிஸ் (OPPO Reno 17 Series) மாடல்களின் முக்கிய பீச்சர்கள் மட்டுமல்லாமல், ரேம், மெமரி மற்றும் கலர் வேரியண்ட்களின் விவரங்களும் கசிந்துள்ளன. இதனால், அந்த மாடல்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் எகிறி இருக்கிறது. இந்தியாவிலும் வெளியாகும் என்பதால், தெரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.
சீனா மட்டுமல்லாமல், இந்தியா உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகளிலும் ஓப்போவின் ரெனோ சீரிஸ் மாடல்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரீமியம் டிசைன் மட்டுமல்லாமல், கேமரா மற்றும் சிப்செட்டில் பக்காவான மாடல்களாக இவை இருக்கும். முன்னதாக வெளியான ஓப்போ ரெனோ 16 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இப்போது, ஒட்டுமொத்த கவனமும் ஓப்போ ரெனோ 17 சீரிஸ் மாடல்கள் மீது விழுத்துள்ளது. சீனாவில் முதலில் வெளியாகும் என்பதால், அங்கு வந்த பிறகே இந்திய வெளியீட்டை கணிக்க முடியும். சொல்லப்போனால், சீனாவில் வெளியீடு நெருங்கிவிட்டது. ஏனென்றால், டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக முக்கிய பீச்சர்கள் கசிந்துள்ளன. ஆகவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொலைவில் இல்லை.
ஓப்போ ரெனோ 17, ரெனோ 17 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 17, Reno 17 Pro Specifications): 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்க இருக்கிறது. ரெனோ சீரிஸ் மாடல்கள் வழக்கமாக டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டிருக்கும். ஆகவே, இதிலும் டெலிபோட்டோவை தவிர மெயின் கேமரா மற்றும் அல்ட்ரா வைடு கேமராவை எதிர்பார்க்கலாம்.
ஓப்போ ரெனோ 17 ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஓப்போ ரெனோ 17 ப்ரோ மாடலில் 6.3 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. அதேபோல 8000mAh பேட்டரியுடன் ரெனோ 17 மாடல் வெளியாக இருக்கிறது. ரெனோ 17 ப்ரோவில் 7200mAh பேட்டரி கொடுக்கப்பட இருக்கிறது. ஓப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போனில் 7000mAh பேட்டரி மட்டுமே கிடைத்தது.
ஆகவே, இந்த சீரிஸ் பேட்டரியில் அப்கிரேடை கொடுத்து இருக்கிறது. ஓப்போ ரெனோ 17 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Qualcomm Snapdragon 7 Gen 4) சிப்செட் கொடுக்கப்பட இருக்கிறது. மறுபுறம் ஓப்போ ரெனோ 17 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்திட்டி 8550 (Octa Core MediaTek Dimensity 8550) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
இந்த மாடல்களில் 3 வேரியண்ட்கள் கிடைக்க இருக்கின்றன. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொடுக்கப்பட உள்ளது. மேலும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட டாப் எண்ட் வேரியண்ட் கிடைக்க இருக்கிறது. ஓப்போ ரெனோ 17 ஸ்மார்ட்போனில் 128 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்குமா என்பது தெரியவில்லை.
பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மேலும், ஸ்னோவ் ஒயிட் (Snow White), ஐஸ் மூன் ஒயிட் (Ice Moon White), கோகோ பிரவுண் (Cocoa Brown), ஸ்டார்லைட் பிங்க் (Starlight Pink) மற்றும் என்கவுண்டர் கேட் (Encounter Cat) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்களுடன் வெளியாகலாம். விலை விவரங்கள் அடுத்த சில வாரங்களில் வெளியாக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications
