Home
Mobile

OPPO சிங்கக்குட்டி.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே.. புது RENO ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?

ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்த ஓப்போ ரெனோ 17 சீரிஸ் (OPPO Reno 17 Series) வெளியீட்டுக்கு ரெடியாகிவிட்டது. இப்போது, ஓப்போ ரெனோ 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே, கேமரா மற்றும் பேட்டரி பீச்சர்கள் கசிந்துள்ளன. மீடியாடெக் டைமன்சிட்டி 8550 சூப்பர் சிப்செட்டுடன் வெளியாக இருப்பது தெரிகிறது. இதுகுறித்த விவங்கள் இதோ.

சீன மார்கெட்டில் ஓரிரு மாதங்களில் ஓப்போ ரெனோ 17 சீரிஸ் வெளியாக இருக்கிறது. பிறகு குளோபல் மற்றும் இந்திய மார்கெட்டில் அடுத்தடுத்து வெளியாகும் என்பதால், ஓப்போ பிரியர்கள் ஒட்டுமொத்த கவனமும் இந்த ஓப்போ ரெனோ 17 சீரிஸ் மீது இருக்கிறது. இந்த நேரத்தில் ஓப்போ ரெனோ 17 ப்ரோ மாடலின் பீச்சர்கள் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துள்ளன.

OPPO சிங்கக்குட்டி.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 120Hz டிஸ்பிளே!

ஓப்போ ரெனோ 17 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 17 Pro Specifications): 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கொடுக்க இருக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8550 சூப்பர் (Super MediaTek Dimensity 8550 SUPER) சிப்டெட் கொண்ட மாடலாக இந்த ஓப்போ ரெனோ 17 ப்ரோ வெளியாக இருக்கிறது.

200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட இருக்கிறது. மேலும், 7000mAh பேட்டரி கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கசிந்துள்ளன. இதை ஓப்போ நிறுவனம் உறுதி செய்யவில்லை.

இருப்பினும், இதே பீச்சர்கள் இடம்பெறவும் வாய்ப்புள்ளது. இந்த ஓப்போ ரெனோ 17 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் மற்ற பீச்சர்களை யூகிக்க முன்னதாக வெளியாக ஓப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் பீச்சர்கள் மற்றும் விலையை பார்க்க வேண்டும். ஏனென்றால், இதில் இருந்து அப்கிரேட் செய்யப்பட்ட பீச்சர்களே அடுத்த வெர்ஷனில் வெளியாகும்.

ஓப்போ ரெனோ16 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno16 Pro specifications): 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆகவே, ஓப்போ ரெனோ17 ப்ரோ மாடலில் காம்பாக்ட் டிஸ்பிளே கிடைக்க இருப்பது தெரிகிறது. இதனால், டிசைனிலும் மாற்றம் இருக்கலாம்.

ஆக்டா கோர் டைமன்சிட்டி 9500எஸ் 3என்எம் (Octa Core Dimensity 9500s 3nm) சிப்செட் கொடுக்கப்பட்டு உள்ளது. இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு (Immortalis G925 MC12 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் பேஸ்டு கலர்ஓஎஸ் 16 கிடைக்கிறது. ஆகவே, ரெனோ17 ப்ரோ மாடலில் ஆண்ட்ராய்டு 17 ஓஎஸ் (Android 17 OS) எதிர்பார்க்கலாம்.

200 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆகவே, கேமராவில் ஹார்ட்வேர் லெவலில் பெரிய மாற்றம் இல்லை. இருப்பினும், பீச்சர்களில் அப்கிரேட்களை எதிர்பார்க்கலாம். 7000mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த ஓப்போ ரெனோ16 ப்ரோ ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை சீன மார்கெட்டில் ரூ.63,000 பட்ஜெட்டில் இருந்தது. ஆகவே, ரெனோ17 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.70,000 பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம். இந்தியாவிலும் மிட்-பிரீமியம் மாடலாக வெளியாக வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்கள் தெரியவரும்.

Best Mobiles in India

English summary
OPPO Reno 17 Pro With 200MP Camera Specifications Leaked Ahead of Launch Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X