Home
Mobile

சத்தமின்றி அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. 200எம்பி கேமரா.. IP69K ரேட்டிங்.. எந்த மாடல்?

ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் இந்த ஒப்போ போன் வெளியாகி உள்ளது. இப்போது இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 16டி அம்சங்கள் (Oppo Reno 16t Specifications): 6.32-இன்ச் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2640×1216 பிக்சல்ஸ், 1.07 பில்லியன் கலர்ஸ், 3600 நிட்ஸ் குளோபல் பீக் பிரைட்னஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), 240Hz டச் சாம்பிளிங் ரேட் (Touch Sampling Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

சத்தமின்றி அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

தரமான டைமன்சிட்டி 8550 சூப்பர் சிப்செட் (Dimensity 8550 Super chipset)உடன் ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த ஸ்மார்ட்போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மூலம் எச்டிஆர் மற்றும் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். அதேபோல் 120X டிஜிட்டல் ஜூம் ஆதரவும் இந்த ஒப்போ போனில் உள்ளது.

செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

IP68 ரேட்டிங் + IP69K ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த புதிய ஒப்போ போனில் உள்ளது.

6700எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

சத்தமின்றி அறிமுகமானது புது ஒப்போ 5ஜி போன்.. எந்த மாடல்?

5ஜி, வைஃபை 6, புளூடூத், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போனில் உள்ளன. மேம்பட்ட ஏஐ அம்சங்கள் உடன் ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த போனின் எடை 191 கிராம் ஆகும். 12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ ரெனோ 16டி போன் வெளியாகி உள்ளது.

ஒப்போ ரெனோ 16டி ஸ்மார்ட்போன் தற்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஒப்போ ரெனோ 16டி ஆரம்ப விலை 3,699 Yuan (இந்திய மதிப்பில் ரூ.52,878)-ஆக உள்ளது.ஹார்ட்பீட், கேலக்ஸி பர்ப்பிள் மற்றும் மூன்லைட் பிளாக் ஆகிய கலர்களில் இந்த போன் வாங்க கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 16t with 6700mAh battery launched in China: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X