OPPO வந்துட்டான் ஓரம்போ.. 50MP OIS கேமரா, 45W சார்ஜிங், 6500mAh பேட்டரி, IP69 உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ (Oppo) நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ரெனோ 16 சீரீஸ் (Reno 16 Series) ஸ்மார்ட்போன்கள் அடுத்த மாதம் (ஜூலை 2026) சில உலகளாவிய சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது இதற்கிடையில் இந்தியாவில் ஒப்போ ரெனோ 16 உடன் சேர்த்து ஒப்போ ரெனோ 16சி (Oppo Reno 16c) என்கிற புதிய மாடலும் அறிமுகமாகும் என்கிற தகவல் கிடைத்துள்ளது
ஒப்போ ரெனோ 16சி இந்திய அறிமுகம்: டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் (Yogesh Brar) பகிர்ந்த தகவல்களை மேற்கோள்காட்டி, ஒப்போ நிறுவனம் இந்தியாவில் ரெனோ 16 மற்றும் ரெனோ 16சி ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளதாக 91 மொபைல்ஸ் (91Mobiles) செய்தி வெளியிட்டுள்ளது.

ஒப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் பெஞ்ச்மார்க் பட்டியல்கள் மூலம் வெளிப்பட்டிருந்தாலும், ஒப்போ ரெனோ 16சி ஸ்மார்ட்போன் ஆனது வரவிருக்கும் ஒப்போ ரெனோ 16 சீரீஸிஸில் ஒரு புதிய சேர்க்கையாக இருக்கும் என்பது போல் தெரிகிறது.
இந்த போன், ரெனோ 15 சீரிஸின் அதே உத்தியைப் பின்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. உதாரணமாக, ரெனோ 15 சீரிஸில் மிகவும் மலிவு விலை மாடலாக ரோபோ ரெனோ 15சி (Oppo Reno 15c) கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது விலையை குறைவாக வைத்திருக்க சில முக்கிய சிறப்பம்சங்களை குறைத்துக்கொண்டு, அதே சமயம் பெரிய டிஸ்பிளேவை வழங்கியது.
நினைவூட்டும் வண்ணம் ஒப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போனின் அறிமுக விலை 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜிற்கு ரூ.34,999 ஆகவும், 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டிற்கு ரூ.37,999 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்தோனேசியா மற்றும் மலேசியாவில் அறிமுகமாகவுள்ள ரெனோ 16எப் (Reno 16F) மாடலின் பல சிறப்பம்சங்களை ரெனோ 16சி ஸ்மார்ட்போனும் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
அப்படியாக ரெனோ 16சி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.57-இன்ச் எப்எச்டி பிளஸ் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் அமோஎல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டிமென்சிட்டி 7300 சிப்செட் (MediaTek Dimensity 7300 SoC)
- LPDDR5x ரேம் மற்றும் UFS 3.1 ஸ்டோரேஜ்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 3.5x ஆப்டிகல் ஜூம் ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ சென்சார்
- 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ்
- 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 6,500mAh பேட்டரி
- பிளாஸ்டிக் ஃபிரேம்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- IP69 ரேட்டிங்
- NFC ஆதரவு
முன்னதாக அறிமுகமான ஒப்போ ரெனோ 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.57-இன்ச் FHD+ (2372 × 1080 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- குவால்காம் 4 என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்
- 12ஜிபி வரை LPDDR4x ரேம்
- 256ஜிபி வரை UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜி
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கலர்ஓஎஸ் 16
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
- எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 30 பிரேம்களில் 4K ரெசல்யூஷன் வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா
- 30 பிரேம்களில் 4K வீடியோ ரெக்கார்டிங்
- 7,000mAh பேட்டரி
- 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்
- 5ஜி SA மற்றும் NSA
- டூயல் 4G VoLTE
- வைஃபை 802.11 ஏசி
- ப்ளூடூத் 5.4
- IP66, IP68, மற்றும் IP69 ரேட்டிங்
- அளவீட்டில் 158.18×74.93×8.14மிமீ
- எடையில் 195 கிராம்


Click it and Unblock the Notifications