OPPO-வின் புது கொம்பன்.. 5ஜி, 6500mAh பேட்டரி, IP68, 50MP OIS கேமரா, 50MP ஆட்டோஃபோகஸ் செல்பீ.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் அதன் புதிய ரெனோ 16 சீரீஸை வேற லெவலில் விரிவாக்கம் செய்கிறது. ஒப்போ (OPPO) நிறுவனமானது அதன் ரெனோ 16 சீரீஸ் (Reno 16 Series) ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வேகத்தில், இந்த சீரீஸின் இந்திய வெளியீட்டு தேதியையும் (ஜூலை 2) அறிவித்துள்ளது.
ஆனால் இந்தியாவில், ஒப்போ ரெனோ 16 சீரிஸின் கீழ் 2 போன்கள் மட்டுமே அறிமுகம் செய்யப்பட உள்ளது (ஆனால் தற்போது வரை ஒப்போ ரெனோ 16 சீரீஸின் கீழ் 4 மாடல்களை அறிமுகம் செய்துள்ளது). இந்தியாவிற்கு வரும் மாடல்கள் - ஒப்போ ரெனோ 16 (Reno 16) மற்றும் ஒப்போ ரெனோ 16சி (Oppo Reno 16c) ஆகும்.

இதில் ரெனோ 16 மாடல் ஒரு காம்பாக்ட் ஸ்மார்ட்போன் ஆகவும், ரெனோ 16சி மாடல் ஆனது சற்றே பெரிய அளவிலான மாடலாகவும் இருக்கலாம். இவ்விரு மாடல்களில் ஒப்போ ரெனோ 16சி ஆனது முற்றிலும் புதிய மாடல் பெயராக தெரிகிறது. முன்னரே குறிப்பிட்டபடி, ஒப்போ ரெனோ 16 சீரிஸின் கீழ் 4 மாடல்கள் அறிமுகமாகி உள்ளன, அதில் ஒப்போ ரெனோ 16சி என்கிற மாடல் இல்லை.
ஒப்போ நிறுவனம் ரெனோ 16எப் (Reno 16F), ரெனோ 16 (Reno 16) மற்றும் ரெனோ 16 ப்ரோ (Reno 16 Pro) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியதோடு, ஐரோப்பிய சந்தைக்காக ஒப்போ ரெனோ 16 எப்எஸ் (Oppo Reno 16 FS) மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய ஒப்போ 16 எப்எஸ் மாடல் ஆனது ரெனோ 16 சீரிஸை விட கீழ்நிலையில் அமைந்திருந்தாலும், பிரீமியம் அமோஎல்இடி டிஸ்பிளே, பெரிய பேட்டரி மற்றும் மூன்று 50-மெகாபிக்சல் கேமராக்கள் போன்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. இதுதான் இந்தியாவிற்கு ஒப்போ ரெனோ 16சி என்கிற பெயரில் வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்போ ரெனோ 16 எப்எஸ் (அல்லது ஒப்போ ரெனோ 16சி) ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:
- 6.57 இன்ச் AMOLED டிஸ்பிளே
- 2372 x 1080 பிக்சல்ஸ்
- FHD+ ரெசல்யூஷன்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1400 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 10-பிட் கலர் சப்போர்ட்
- டிஸ்ப்ளேவிலேயே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் (optical fingerprint sensor)
- மீடியாடெக் டிமென்சிட்டி 7300 எனர்ஜி (MediaTek Dimensity 7300 Energy) சிப்செட்
- 8ஜிபி LPDDR4X ரேம் மற்றும் 256ஜிபி UFS 3.1 ஸ்டோரேஜ்
- Android அடிப்படையிலான ColorOS 16 ஓஎஸ்
- OIS வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா
- 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- OIS வசதியுடன் கூடிய 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 50-மெகாபிக்சல் ஆட்டோஃபோகஸ் செல்பீ கேமரா
- முன் மற்றும் பின் கேமராக்கள் இரண்டும் 30fps வேகத்தில் 4K வீடியோ பதிவை ஆதரிக்கின்றன
- 45W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
- 6,500mAh பேட்டரி
- Snap Key AI பட்டன்
- ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
- ப்ளூடூத் 5.4, வைஃபை 6, NFC
- IP68 தரத்திலான நீர் மற்றும் தூசி எதிர்ப்பு திறன்
- eSIM ஆதரவு
- Reno 16 மாடல்களை ஒப்போ பபிள் (Oppo Bubble) ஆக்சஸெரீயை (Accessory) ஆதரிக்கிறது.
ஒப்போ ரெனோ 16 எப்எஸ் ஸ்மார்ட்போனின் விலை: ஒப்போ ரெனோ 16 எப்எஸ் ஸ்மார்ட்போன் ஆனது Purple Black மற்றும் Pop White ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில், இதன் 8ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் விலை €649 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.69700 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தியாவில் இது ஒப்போ ரெனோ 16சி ஆக ரீபிராண்ட் செய்யப்பட்டால், இதன் விலை இவ்வளவு அதிகமாக இருக்க வாய்ப்பில்லை.


Click it and Unblock the Notifications