Home
Mobile

OPPO நீ மூளைக்காரன் யா.. Bubble Selfie ஸ்க்ரீன், 7000mAh பேட்டரி உடன் புது 5ஜி போன்.. எந்த மாடல்?

மே 25 ஆம் தேதி அன்று சீனாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் ரெனோ 16 சீரிஸ் (Reno 16 Series) பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட தொடங்கியுள்ளது. சீன அறிமுகத்தை தொடர்ந்து ஒப்போ ரெனோ 16 சீரீஸ், ஜூலை மாத வாக்கில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாண்டர்ட் ஒப்போ ரெனோ 16 (OPPO Reno 16) மற்றும் ஒப்போ ரெனோ 16 ப்ரோ (OPPO Reno 16 Pro) ஆகிய 2 மாடல்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் இந்த சீரிஸ் - கேமரா மேம்பாடுகள், பெரிய பேட்டரிகள் மற்றும் பிரீமியம் வடிவமைப்பு ஆகிய விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

OPPO நீ மூளைக்காரன் யா.. Bubble Selfie ஸ்க்ரீன், 7000mAh பேட்டரி!

அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருக்கும் சூழ்நிலையில் ஒப்போ நிறுவனம் பகிர்ந்த சமீபத்திய டீசரில், ஒப்போ ரெனோ 16 மற்றும் ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 200எம்பி ப்ரைமரி சென்சார் தலைமையிலான ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இடம்பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

200எம்பி ப்ரைமரி கேமராவுடன் கூடுதலாக, ரெனோ 16 சீரிஸின் கேமரா செட்டப்பில் 50எம்பி அல்ட்ரா-வைட் கேமரா, 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஒரு ஸ்மார்ட் எல்இடி ஃபிளாஷ் மாட்யூல் ஆகியவைகளும் இடம்பெறும். இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெகாபிக்சல் எண்ணிக்கை ஒரே மாதிரியாக இருந்தாலும், பேஸிக் கேமரா ஹார்ட்வேர் ஆனது இரண்டு மாடல்களுக்கும் இடையில் வேறுபடலாம்.

சுவாரசியமாக ஒப்போ நிறுவனம், அதன் ரெனோ 16 சீரீஸ் உடன், ஒப்போ பபிள் டிரெண்டி செல்பீ ஸ்க்ரீன் (Oppo Bubble Trendy Selfie Screen) என்ற புதிய ஸ்மார்ட்போன் ஆக்சஸெரீ ஒன்றையும் அறிமுகப்படுத்துகிறது. இது ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் காந்தம் மூலம் இணைக்க வடிவமைக்கப்பட்ட, கஸ்டமைஸ் செய்யக்கூடிய ஒரு வட்ட வடிவிலான டிஸ்பிளே ஆகும்.

இந்த பபிள் டிரெண்டி செல்பீ ஸ்க்ரீன் ஆனது ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு ஒரு ரிமோட் கேமரா கம்பானியன் ஆக செயல்படுவதாக தெரிகிறது. ஸ்மார்ட்போனின் ன்புறத்தில் காந்தம் மூலம் இணைக்கப்பட்டவுடன், இது பயனர்கள் போனின் ரியர் கேமரா செட்டப்பை பயன்படுத்தி செல்பீகளை எடுக்க அனுமதிக்கிறது, அதே நேரத்தில் அதன் வட்ட வடிவிலான ஸ்க்ரீனில் ஒரு நேரடி முன்னோட்டத்தை காட்டுகிறது. இது சீனாவிற்கு மட்டுமே பிரத்யேகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஆனாலும் இப்போதைக்கு எதையும் உறுதியாக சொல்ல முடியாது.

ஒப்போ ரெனோ 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஆரம்பகால லீக்ஸ் மற்றும் அறிக்கைகளின்படி, ரெனோ 16 மற்றும் ரெனோ 16 ப்ரோ ஆகியவைகள் அளவு மற்றும் வடிவமைப்பில் கணிசமாக வேறுபடும்.

ஸ்டாண்டர்ட் ரெனோ 16 மாடலில், 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய ஒப்பீட்டளவில் கச்சிதமான 6.32-இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 8550 பிராசஸரால் இயக்கப்படலாம் மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 6700mAh பேட்டரியை கொண்டிருக்கும்.

ரெனோ 16 ப்ரோ மாடலில் அதே ரெசல்யூஷன் மற்றும் ரெஃப்ரெஷ் ரேட்டை வழங்கும் பெரிய 6.78-இன்ச் OLED டிஸ்பிளே இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிப்செட்டை பொறுத்தவரை, இன்னும் அதிக சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் சிப்செட் மற்றும் பெரிய 7000mAh பேட்டரி இடம்பெறலாம். ப்ரோ மாடல் ஆனது 80W வயர்டு சார்ஜிங்குடன் கூடுதலாக 50W வயர்லெஸ் சார்ஜிங்கையும் ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது,

Best Mobiles in India

English summary
Oppo Reno 16 Series With 200MP Triple Rear Camera Launching Along with Bubble Trendy Selfie Screen on May 25
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X