Home
Mobile

OnePlus காலி.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. IP69K ரேட்டிங்.. மிரளவிட வருது OPPO மாடல்கள்!

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் மாடல்களுக்கு போட்டியாக ஓப்போ ரெனோ 16 சீரிஸ் (OPPO Reno 16 Series) எதிர்பார்க்கப்படுகிறது. குளோபல் மார்கெட்டில் வெளியாகும்போது, இந்தியாவில் களமிறங்க இருக்கிறது. இப்போது, குளோபல் மார்கெட்டின் விலை விவரங்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து பார்க்கலாம்.

கடந்த மே மாதத்தில் சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ 16 சீரிஸ் மாடல்கள் வெளியாகின. இதில் ஓப்போ ரெனோ 16 (OPPO Reno 16) மற்றும் ஓப்போ ரெனோ 16 ப்ரோ (OPPO Reno 16 Pro) ஆகிய மாடல்கள் களமிறங்கின. 200 எம்பி மெயின் கேமரா, 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங் போன்ற பீச்சர்களில் மிரளவிட்டன. இதனால், இந்தியா உள்பட மற்ற நாடுகளில் எதிர்பார்ப்பு எகிறியது.

OnePlus காலி.. 200MP கேமரா.. 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. மாடல்?

ஆகவே, குளோபல் மார்கெட்டில் எப்போது வெளியாகும் என்று ஓப்போ பிரியர்கள் வெயிட்டிங் மோடில் காத்திருந்தனர். இந்த நேரத்தில் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று கூறப்பட்டதால், விலை மற்றும் பீச்சர்களின் பக்கம் கவனம் சென்றது. இதற்கு ஏற்ப குளோபல் மார்கெட்டில் விலை விவரங்கள் கசிந்துள்ளன. இது சீன மார்கெட்டைவிட அதிகமாக இருக்கிறது.

இந்தியாவில் மாறுபாடுகள் இருக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், குளோபல் மார்கெட்டின் விலைகளை முதலில் பார்க்கலாம், ஓப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போனின் விலை ரூ.98,056ஆகவும், ஓப்போ ரெனோ 16 ப்ரோ மாடலின் விலை ரூ.1,19,871ஆகவும் இருக்கிறது. இந்த மாடல்கல் பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஓப்போ ரெனோ 16 எப்எஸ் மாடலின் விலை ரூ.87,248ஆக இருக்கிறது.

இதுவும் பிளாக் மற்றும் ஒயிட் கலரில் கிடைக்க இருக்கிறது. இந்த விலை யூரோ அடிப்படையில் கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, இது ஐரோப்பிய மார்கெட்களில் இந்த விலைக்கு கிடைக்கலாம். ஆனால், இந்தியாவில் இது அதிக விலையாக இருக்கும். ஆகவே, இதைவிட கம்மியான விலைக்கே எதிர்பார்க்கலாம். சீன மார்கெட்டில் ரெனோ 16 மாடலின் விலை ரூ.50,000 பட்ஜெட்டில் உள்ளது.

ஓப்போ ரெனோ 16 ப்ரோ மாடலின் விலை ரூ.64,000 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, இந்த பட்ஜெட் செக்மெண்ட்டில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். பீச்சர்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால், விலையிலும் மாற்றங்கள் இருக்கும். ஆகவே, சீன வெர்ஷனில் கிடைத்த பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம். இதே பீச்சர்கள் குளோபல் வெர்ஷன்களில் கிடைக்கலாம்.

ஓப்போ ரெனோ 16 அம்சங்கள் (OPPO Reno 16 Specifications): 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8550 சூப்பர் 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. 200 எம்பி மெயின் + 50 எம்பி அல்ட்ரா வைடு + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ உள்ளது. 6700mAh பேட்டரி, 80W சார்ஜிங் கிடைக்கிறது.

ஓப்போ ரெனோ 16 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 16 Pro Specifications): 6.78 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 9500எஸ் 3என்எம் சிப்செட், இம்மார்டலிஸ் ஜி925 எம்சி12 ஜிபியு கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) உள்ளது.

கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமராவை கொடுக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. 7000mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதே பீச்சர்களை இங்கு எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
OPPO Reno 16 Series Pricing Leaked Globally Ahead Of Launch Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X