இதுக்கு தானே வெயிட்டிங்.. 200எம்பி கேமரா.. Dimensity சிப்செட்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் விரைவில் ஒப்போ ரெனோ 16 ப்ரோ (Oppo Reno 16 Pro) ஸ்மார்ட்போனை உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இந்த போன் அசத்தலான வடிவமைப்புடன் வெளிவரும். இந்நிலையில் ஒப்போ ரெனோ 16 ப்ரோ போனின் முக்கிய விவரக்குறிப்புகள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ரேனோ 16 ப்ரோ அம்சங்கள் (Oppo Reno 16 Pro Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8550 சூப்பர்(Dimensity 8550 Super) சிப்செட் வசதியுடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் கேமிங் ஆப்களை தடையின்றி பயன்படுத்தலாம்.

ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ ரேனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட்கள் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி ஒப்போ ரேனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போனின் பின்புறம் 200எம்பி மெயின் கேமரா + 50எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா லென்ஸ் ஆகிய கேமராக்கள் உள்ளன. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியுடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) வசதி உள்ளதாக கூறப்படுகிறது.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), யூ. எஸ். பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
5ஜி, 4ஜி, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த ஒப்போ போனில் உள்ளன. அனைத்து சிறப்பான அம்சங்களுடன் இந்த ஒப்போ ரேனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications