Home
Mobile

OPPO-வின் குட்டி காளை.. OnePlus-ல் உள்ள Plus Key உடன் புது Mini போன்.. எந்த மாடல்?

கடந்த 2026 ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஒப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன்களின் அப்கிரேடட் வெர்ஷன்களான ஒப்போ ரெனோ 16 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 16 ப்ரோ மினி (Oppo Reno 16 Pro Mini) மாடல்களை குறித்த புதிய அப்டேட்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

டிப்ஸ்டர் தேபயன் ராய் வழியாக பகிரப்பட்டுள்ள புகைப்படம் வழியாக வரவிருக்கும் ரெனோ 16 ப்ரோ சீரீஸில் காணப்படும் மிகப்பெரிய மாற்றம் அதன் ரியர் கேமரா செட்டப் தான் என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது இது செங்குத்தாக அமைக்கப்பட்ட பில்-ஷேப்டு மாட்யூலை பயன்படுத்துகிறது. அதில் இரண்டு பெரிய சென்சார்கள் உள்ளன. அதனுடன் ஒரு தனி வட்ட வடிவிலான கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷும் இணைக்கப்பட்டுள்ளது.

OPPO: OnePlus-ல் உள்ள Plus Key உடன் புது Mini போன்.. எந்த மாடல்?

ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில், ஒப்போ நிறுவனம், பழைய ஐபோன் ப்ரோ மாடல்களான ஐபோன் 16 சீரிஸ் வரை பயன்படுத்தியதை போலவே, ஒரு வட்டமான செவ்வக மாட்யூலுக்குள் தனித்தனியாக தெரியும் மூன்று கேமரா ரிங்களை பயன்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ரெனோ 16 ப்ரோ மற்றும் ப்ரோ மினி ஆகியவை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் டிசைனை பின்பற்றுவது போல தெரிகிறது
அதாவது லென்ஸ்கள் ஒரு செங்குத்தான பில் ஷேப்பிலும், ஃபிளாஷ் ஆனது பக்கவாட்டிலும் அமைந்துள்ளன.

மேலும் ரெனோ 16 சீரிஸில் எதிர்பார்க்கப்படும் ஒரு கூடுதல் ஹார்டுவேர் அம்சம் ஆக 'பிளஸ் கீ' இருக்கிறது. இதை நாம் இதுவரை ஒன்பிளஸ் போன்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம். ஒப்போ நிறுவனம் இதற்கு முன்பு ஃபைண்ட் என்6 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த ஷார்ட்கட்-ஸ்டைல் பட்டன் கான்செப்டை 'ஸ்னாப் கீ' என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்டன் - ஒரே பிரஸ்ஸில் (Press) ஏஐ டூல்ஸ், கேமரா செயல்பாடுகள் மற்றும் ஷார்ட்கட்களை இயக்க முடியும்.

ஒப்போ ரெனோ 16 சீரீஸ் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும்? லீக் ஆன விவரங்களின்படி, ஒப்போ ரெனோ 16 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இந்தியாவில் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய கசிவுகள் ஜூன் மாதத்தில் சீனாவில் அறிமுகமாகும் என்று குறிப்பிட்டிருந்தன.

ஆனால் ஒப்போ நிறுவனம் இன்னும் இந்த சீரீஸை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை, மேலும் அதன் அம்சங்கள் குறித்தும் எந்த அப்டேட்டும் இல்லை. ஆக இந்த லான்ச் டைம்லைன் உண்மையாக இருந்தால், ரெனோ 15 ப்ரோ மினி இந்திய சந்தையில் நுழைந்த (ஜனவரி 2026) சுமார் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு பிறகு ரெனோ 16 ப்ரோ சீரீஸ் வெளியாகும்.

இந்தியாவில் வாங்க கிடைக்கும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மின் ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: முன்னரே குறிப்பிட்டபடி, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது கடந்த ஜனவரி 2026-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தற்போதைய ஆரம்ப விலை ரூ.59,999 ஆகும். இது ஒரு காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாகும்.

ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3,600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உடனான 6.32-இன்ச் 1.5K AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது

சிப்செட்டை பொறுத்தவரை மீடியாடெக் டைமென்சிட்டி 8450 சிப்செட் மூலம் இயங்குகிறது. கேமராக்களை பொறுத்தவரை இது OIS உடன் கூடிய 200MP சாம்சங் HP5 ப்ரைமரி சென்சார், 3.5x ஆப்டிகல் ஜூம் வழங்கும் 50MP அல்ட்ராவைடு மற்றும் 50MP பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராக்கள் அடங்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது

முன்பக்கத்தில் 50MP அல்ட்ராவைடு செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் வசதியுடன் கூடிய 6,200mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது விண்வெளித் தரத்திலான அலுமினியக் கட்டமைப்பு மற்றும் IP66 / IP68 / IP69 ரேட்டிங்களை பெற்றுள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 16 Pro and Reno 16 Pro Mini Design Leaked Suggests Big Change in Camera Setup and Plus Key
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X