Home
Mobile

மே களை கட்டுதே.. 10420mAh பேட்டரி டேப்லெட் உடன் சேர்த்து 2 புது OPPO 5ஜி போன்கள்.. எந்த மாடல்கள்?

ஒப்போ (OPPO) நிறுவனம் அதன் அடுத்த ரெனோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயார் ஆகி வருகிறது. அது ஒப்போ ரெனோ 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆகும். இது இம்மாத இறுதியில் சீனாவிலும், அதன் பின்னர் இந்தியா உட்பட மற்ற உலகளாவிய சந்தைகளிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

ஒப்போ ரெனோ 16 சீரீஸின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதால் சமீபத்திய வாரங்களில், ஒப்போ நிறுவனமானது இந்த ஸ்மார்ட்போன்களை பற்றிய பல விவரங்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதே நேரத்தில் சீனாவில் முன்பதிவுகளும் தொடங்கி உள்ளன. இதற்கிடையில், வரவிருக்கும் ரெனோ 16 மற்றும் ரெனோ 16 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் கலர் ஆப்ஷன்கள் மற்றும் விலை விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகியுள்ளன.

10420mAh பேட்டரி டேப்லெட் உடன் சேர்த்து 2 புது OPPO 5ஜி போன்கள்!

டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த சமீபத்திய லீக்கின் படி, ஒப்போ ரெனோ 16 (Oppo Reno 16) ஸ்மார்ட்போனானது ஃபேரி பர்ப்பிள், லக்கி க்ளோவர், பிளாக் ஹார்ஸ் மற்றும் ஹார்ட்பீட் ஸ்டார் (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) ஆகிய 4 கலர்களில் அறிமுகம் செய்யப்படும். இதற்கிடையில், ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ட்ரீம் ப்ளூ, பிளாக் ஹார்ஸ் மற்றும் ஹார்ட்பீட் ஸ்டார் (சீன மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டது) ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒப்போ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட் செக்ண்டரி டிஸ்பிளே ஃபீச்சர் (smart secondary display feature) ஆனது "ஒப்போ பப்பிள்" (Oppo Bubble) என்ற பெயரில் சந்தைப்படுத்தப்படலாம் என்றும் டிப்ஸ்டர் குறிப்பிட்டுள்ளார். இது, ரெனோ 16 சீரீஸில் ஒரு புதிய ஏஐ அடிப்படையிலான செயல்பாடு இருக்கும் என்று சுட்டிக்காட்டி உள்ள ஒப்போ நிறுவனம், சமீபத்தில் பகிர்ந்த டீசர்கள் மூலம் இதை உறுதியும் செய்துள்ளது

விலையை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 16 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது, சீனாவில் சுமார் CNY 4,000 (தோராயமாக ரூ.56,000) என்கிற விலையில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 16 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் இல்லை. இருப்பினும் இது ப்ரோ மாடலை விட சற்றே மலிவான விலகி வரும் என்பது வெளிப்படை.

ரெனோ 16 சீரிஸுடன் சேர்த்து, ஒப்போ நிறுவனம் ஒரு புதிய டேப்லெட்டையும் அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. அதன் மாடல் பெயர் இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும், அது 3கே ரெசல்யூஷன் மற்றும் 144ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டுடன் கூடிய 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த டேப்லெட், மீடியாடெக் டைமென்சிட்டி 9500s சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்றும், அதனுடன் 16ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த ஒப்போ டேப்லெட்டில் 10,420mAh பேட்டரி இருக்கும் என்று டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் கூறுகிறார். இது 5.99மிமீ தடிமன் கொண்டதாகவும், சுமார் 577 கிராம் எடையுடனும் இருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.

முன்னதாக டிப்ஸ்டர் தேபயன் ராய் வழியாக ஒப்போ ரெனோ 16 ப்ரோ சீரிஸின் டிசைன் குறித்த விவரங்கள் லீக் ஆகி இருந்தது. அதன்படி ரெனோ 16 ப்ரோ சீரீஸில் காணப்படும் மிகப்பெரிய மாற்றம் அதன் ரியர் கேமரா செட்டப் தான் என்பதை வெளிப்படுத்துகிறது. அதாவது இது செங்குத்தாக அமைக்கப்பட்ட பில்-ஷேப்டு மாட்யூலை பயன்படுத்துகிறது. அதில் இரண்டு பெரிய சென்சார்கள் உள்ளன. அதனுடன் ஒரு தனி வட்ட வடிவிலான கேமரா மற்றும் எல்இடி ஃபிளாஷும் இணைக்கப்பட்டுள்ளது.

ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில், ஒப்போ நிறுவனம், பழைய ஐபோன் ப்ரோ மாடல்களான ஐபோன் 16 சீரிஸ் வரை பயன்படுத்தியதை போலவே, ஒரு வட்டமான செவ்வக மாட்யூலுக்குள் தனித்தனியாக தெரியும் மூன்று கேமரா ரிங்களை பயன்படுத்தியுள்ளது. இதற்கிடையில், ரெனோ 16 ப்ரோ மற்றும் ப்ரோ மினி ஆகியவை ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் கேமரா மாட்யூல் டிசைனை பின்பற்றுவது போல தெரிகிறது.

மேலும் ரெனோ 16 சீரிஸில் எதிர்பார்க்கப்படும் ஒரு கூடுதல் ஹார்டுவேர் அம்சம் ஆக 'பிளஸ் கீ' இருக்கிறது. இதை நாம் இதுவரை ஒன்பிளஸ் போன்களில் மட்டுமே பார்த்திருக்கிறோம். ஒப்போ நிறுவனம் இதற்கு முன்பு ஃபைண்ட் என்6 மற்றும் ஃபைண்ட் எக்ஸ்9 சீரிஸ் போன்ற ஸ்மார்ட்போன்களில் இந்த ஷார்ட்கட்-ஸ்டைல் பட்டன் கான்செப்டை 'ஸ்னாப் கீ' என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பட்டன் - ஒரே பிரஸ்ஸில் (Press) ஏஐ டூல்ஸ், கேமரா செயல்பாடுகள் மற்றும் ஷார்ட்கட்களை இயக்க முடியும்.

Best Mobiles in India

English summary
Oppo Reno 16 Oppo Reno 16 Pro Expected to Launch Soon Along with 10420mAh Battery New Oppo Tablet
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X