போட்டான் பாரு OPPO.. ரூ.5,500 டிஸ்கவுண்ட்.. 7000mAh பேட்டரி.. 50MP OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்த ஓப்போ ரெனோ 15சி (OPPO Reno 15c) ஸ்மார்ட்போனின் விற்பனை டிஸ்கவுண்ட் போக தொடங்கிவிட்டது. கூப்பன் டிஸ்கவுண்ட், பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் 180 நாட்களுக்கான ஸ்கிரீன் டேமேஜ் புரொடக்சன் கிடைப்பதால், விற்பனையில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த ஓப்போ ரெனோ 15சி மாடலின் விவரங்களை பார்க்கலாம்.
8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,999ஆகவும் இருக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2,000 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3,500 ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது. ஆகவே, ரூ.29,499 விலைக்கு இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம்.

12 மாதங்களுக்கு ஜீரே டவுண்ட் பேமெண்ட் கிடைக்கிறது. ரூ.3,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் கிடைக்கிறது. 180 நாட்களுக்கான ஸ்கிரீன் டேமேஜ் புரொடக்சனை கொடுத்து இருக்கிறது. ஆப்டர்க்ளோவ் பிங்க் (Afterglow Pink) மற்றும் ட்வைலைட் ப்ளூ (Twilight Blue) ஆகிய 2 கலர்களில் இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போனை வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஸ்டோர்களிலும் கிடைக்கும்.
ஓப்போ ரெனோ 15சி அம்சங்கள் (OPPO Reno 15c Specifications): 50 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கொடுக்கப்பட்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஏஐ டிராவல் போட்டோகிராபி சப்போர்ட் கொண்டுள்ளது.
நைட் போட்டோகிராபிக் அவுட்புட் கொடுக்க ஏஐ பிளாஷ் போட்டோகிராபி 2.0 (AI Flash Photography 2.0) கிடைத்துள்ளது. டல்லாக இருக்கும் போட்டோவை க்ளோவ் செய்ய ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow) கிடைக்கிறது. நேச்சுரல் லைட் (Natural Light), ரிம் லைட் (Rim Light), ஃபிளாஷ் லைட் (Flash Light) மற்றும் ஸ்டூடியோ லைட் (Studio Light) பீச்சர்கள் கிடைக்கின்றன.
பிரீமியம் ஸ்லோவ் மோஷன் அவுட்புட் கொடுக்க ஏஐ மோஷன் போட்டோ ஸ்லோவ்-மோ (AI Motion Photo Slow-Mo) கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏஐ மோஷன் போட்டோ எரைசர் (AI Motion Photo Eraser) மற்றும் 4கே அல்ட்ரா கிளியர் வீடியோ (AI Ultra Clear Video) கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்கப்பட்டு உள்ளது. ஓபிளஸ் கனெக்ட் (O+ Connect), ஏஐ மைண்ட் ஸ்பேஸ் (AI Mind Space) உள்ளிட்ட பீச்சர்களுடன் கலர்ஓஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது.
கார்னிங் கொரில்லா கிளாஸ் பிளஸ் (Corning Gorilla Glass+) புரொடெக்சன் கொண்ட 6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது. 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரி உள்ளது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.


Click it and Unblock the Notifications








