Home
Mobile

OPPO ஒரே போடு.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 50MP டெலிபோட்டோ.. புது ரெனோ15 போன்.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனம் ரெனோ 15 சீரிஸ் மாடல்களில் அடுத்த மாடலான ஓப்போ ரெனோ 15சி (OPPO Reno 15C) ஸ்மார்ட்போனை களமிறக்க இருக்கிறது. இப்போது, முக்கிய பீச்சர்கள் மார்கெட்டில் வெளியாகி இருக்கின்றன. ரெனோ15 மாடலைவிட பெரிய டிஸ்பிளே கொண்ட மாடலாக இது இருக்கிறது. அதேபோல அதைவிட பட்ஜெட்டில் மலிவாகவும் கிடைக்க இருக்கிறது. இந்த ரெனோ 15சி மாடலின் முழு விவரங்கள் இதோ.

ஓப்போ ரெனோ 15 (OPPO Reno 15) மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ (OPPO Reno 15 Pro) ஆகிய மாடல்கள் இந்த வார தொடக்கத்தில் வெளியாகின. அப்போதே ரெனோ 15சி ஸ்மார்ட்போன் டிசம்பர் மாதத்தில் களமிறங்கும் என்று உறுதி செய்யப்பட்டது. அதோடு டிசைனும் உறுதியாகியது. இப்போது, முக்கிய பீச்சர்கள் டிப்ஸ்டர் பால்டு பாண்டா (Bald Panda) மூலம் கசிந்துள்ளது.

OPPO ஒரே போடு.. பட்ஜெட்ல OLED டிஸ்பிளே.. SONY கேமரா.. 50MP டெலிபோட்டோ!

ஓப்போ ரெனோ 15சி அம்சங்கள் (OPPO Reno 15C Specifications): இந்த ரெனோ ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் (1272 x 2772 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் 1.5K ரெசொலூஷன் 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் கிடைக்கிறது.

சோனி எல்ஒய்டி 600 (SONY LYT 600) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா + சோனி ஐஎம்எக்ஸ்355 (SONY IMX355) சென்சாருடன் 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + சாம்சங் ஜேஎன்5 (Samsung JN5) சென்சாருடன் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஆகவே, கேமராவில் பிரீமியம் மாடலாக எதிர்பார்க்கலாம். அதேபோல டிஸ்பிளேவிலும் பெரிய மாடலாக இருக்கிறது.

ஏனென்றால், ஓப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனில் 6.32 இன்ச் டிஸ்பிளே மட்டுமே கிடைத்தது. ஆனால், இதில் 6.59 இன்ச் டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. இருப்பினும், ஓப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனை விட மலிவான விலைக்கே இதை எதிர்பார்க்கலாம். இந்த பீச்சர்கள் மட்டுமே மார்கெட்டில் கசிந்துள்ளன. மற்ற விவரங்கள் வெளியாகவில்லை.

டிசம்பர் மாதத்தில் சீன மார்கெட்டில் வெளியாக இருக்கிறது. அதே நேரத்தில் ஓப்போ ரெனோ 15 மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ மாடல்கள் குளோபல் வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கிறது. இந்தியாவிலும் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் மாடல்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், ஓப்போ ரெனோ 14 சீரிஸ் மாடல்கள் இங்கு வெளியாகி மிகப்பெரும் வரவேற்பை பெற்றன.

ஓப்போ ரெனோ 15 அம்சங்கள் (OPPO Reno15 Specifications): இந்த ஸ்மார்ட்போனில் 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (Crystal Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core Dimensity 8450 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது.

200 எம்பி மெயின் கேமரா (OIS) + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. டெலிபோட்டோவில் ஓஐஎஸ் கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த ரெனோ15 ஸ்மார்ட்போனுக்கு IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கிடைக்கிறது.

80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 6200mAh பேட்டரி கிடைக்கிறது. சீன மார்கெட்டில் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.37,000 பட்ஜெட்டில் இருந்தது. இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. அதேபோல பீச்சர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கலாம். ஆகவே, சிறிய மாற்றங்களுடன் இந்திய மார்கெட்டில் வெளியாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 15c With 50 Camera Snapdragon 7 Gen 4 Chipset Key Specifications Tipped Ahead of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X