இது எதிர்பார்க்காத சர்ப்ரைஸ்.. 6500mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. அறிமுகமானது புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் தனது புதிய ஒப்போ ரேனோ 15சி (Oppo Reno 15c) ஸ்மார்ட்போனை இன்று அதிகாரப்பூர்வமாக சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும். இப்போது இந்த புதிய ஒப்போ ரேனோ 15சி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.
ஒப்போ ரேனோ 15சி அம்சங்கள் (Oppo Reno 15c Specifications): 6.59-இன்ச் பிளாட் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் இந்த ஒப்போ ரேனோ 15சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தரமான ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 (Snapdragon 7 Gen 4) சிப்செட் உடன் இந்த ஒப்போ ரேனோ 15சி போன் வெளிவந்துள்ளது. மேலும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த ஒப்போ ரேனோ 15சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor)வசதியும் இந்த புதிய போன் உள்ளது. அதேபோல் ஒப்போ ரேனோ 15சி போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.
50எம்பி சோனி எல்ஒய்டி-600 பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரேனோ 15சி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் ஒப்போ ரேனோ 15சி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் ஸ்ட்ரீயோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), X-axis linear motor (எக்ஸ்-ஆக்சிஸ் லீனியர் மோட்டார்) உள்ளிட்ட வசதிகளும் இந்த போனில் உள்ளன.
6500mAh பேட்டரி உடன் இந்த ஒப்போ ரேனோ 15சி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
டூயல் சிம் 5ஜி, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளும் இந்த ஒப்போ போனில் உள்ளன. மேலும் இந்த ஒப்போ ரேனோ 15சி ஸ்மார்ட்போனின் எடை 197 கிராம் ஆகும். ஸ்டார்லைட் போ, அரோரா ப்ளூ மற்றும் காலேஜ் ப்ளூ நிறங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரேனோ 15சி போனின் 2,899 Yuan (இந்திய மதிப்பில் ரூ.37,294)-ஆக உள்ளது. பின்பு இதன் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் விலை 3,199 Yuan (இந்திய மதிப்பில் ரூ.41,153)-ஆக உள்ளது. டிசம்பர் 19 முதல் சீனாவில் இந்த போன் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








