கண்ணா 3வது லட்டு தின்ன ஆசையா.. பட்ஜெட் விலையில் இன்னொரு புதிய OPPO போன்.. எந்த மாடல்?
ஒப்போ (OPPO) நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன்கள் ஆக ஒப்போ ரெனோ 15 சீரீஸ் நேற்று (நவம்பர்.17) சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்ட வேகத்தில் ரெனோ 15 சீரிஸின் கீழ் 2 மாடல்கள் மட்டுமல்ல, மூன்றாவதாக மற்றும் மலிவான விலைக்கு இன்னொரு மாடலும் அறிமுகமாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒப்போ ரெனோ 15 (Oppo Reno 15) மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ (Oppo Reno 15 Pro) மாடல்களுடன், விரைவில் ஒப்போ ரெனோ 15சி (Oppo Reno 15C) என்று அழைக்கப்படும் இன்னொரு மாடலும் ரெனோ 15 சீரிஸின் கீழ் அறிமுகமாகும் என்று ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியள்ளது.

எப்போது அறிமுகமாகும்? ஒப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் ஆனது 2025 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ரெனோ 15 சீரிஸில் ஒரு "என்ட்ரி லெவல்" விருப்பமாக நிலைநிறுத்தப்படும். இப்போதைக்கு அதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் மற்றும் சரியான வெளியீட்டு தேதி போன்ற பிற விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் ரெனோ 15 சீரீஸ்-ல் ஒப்போ ரெனோ 15சி ஒரு "என்ட்ரி லெவல்" ஸ்மார்ட்போன் ஆக இருக்கும் என்று கூறப்படுவதால், ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனை விட இது மலிவான விலைக்கே அறிமுகமாகும். குறிப்பிடத்தக்க வகையில் சீனாவில் ரெனோ 15 ஸ்மார்ட்போன் ஆனது இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.37,000 க்கு அறிமுகமாகி உள்ளது. இது பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலை ஆகும்.
ஒப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.59-இன்ச் டிஸ்பிளே ( அதாவது ரெனோ 15 இல் உள்ள 6.32-இன்ச் AMOLED திடிஸ்பிளேவை விட பெரியது)
- புல் எச்டி பிளஸ் (1272 × 2772 பிக்சல்ஸ்) ரெசல்யூஷன்
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி
- 93.4 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- ஒயிட் மற்றும் ப்ளூ கலர் ஆப்ஷன்கள்
- ஒரு யுஎஸ்பி டைப்-சி போர்ட்
- ஒரு ஸ்பீக்கர் கிரில்
- சிம் கார்டு ட்ரே
- மெட்டல் ஃபிரேம்
இன்று (நவ.18) இந்தியாவில் அறிமுகமான ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் விற்பனை விவரங்கள்: 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் கூடிய ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ஸ்மார்ட்போன ரூ.74,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
இதே ஸ்மார்ட்போனின் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.84,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ஸ்பேஸ் பிளாக் (Space Black) மற்றும் டைட்டானியம் க்ரே (Titanium Grey) கலர்களில் வாங்க கிடைக்கும்.
மறுகையில் உள்ள ஒப்போ பைண்ட் எக்ஸ்9 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிங்கிள் 16ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.1,09,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த மாடல் சில்க் ஒயிட் (Silk White) மற்றும் டைட்டானியம் சார்கோல் (Titanium Charcoal) என்கிற 2 கலர்களில் வாங்க கிடைக்கும்.
விற்பனையை பொறுத்தவரை ஒப்போ பைண்ட் எக்ஸ்9 சீரீஸின் 2 மாடல்களுமே வருகிற நவம்பர் 21 ஆம் தேதி முதல் ஒப்போ இந்தியா ஸ்டோர் (Oppo India Store), பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் அமேசான் (Amazon) வழியாக வாங்க கிடைக்கும். ஒப்போ நிறுவனம் பைண்ட் எக்ஸ்9 மாடலுக்கான ஒப்போ ஹசல்பிளாட் டெலிகன்வெர்ட்டர் கிட்டையும் (Oppo Hasselblad Teleconverter Kit) அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 29,999 ஆகும்.


Click it and Unblock the Notifications








