OPPO ஒரே போடு.. ரூ.3,499 ஆஃபரில் 7000mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. OIS கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ 15சி (OPPO Reno 15c) ஸ்மார்ட்போனானது பேங்க் தள்ளுபடியுடன் ப்ரீ-ஆர்டருக்கு கிடைக்கிறது. ஓப்போ ரெனோ 15 சீரிஸ் மாடல்களில் கம்மி விலை மாடலாக இருப்பதால், ப்ரீ ஆர்டரில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போனின் தள்ளுபடி மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஓப்போ தளங்களில் இப்போது ப்ரீ ஆர்டருக்கு கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.34,999ஆக இருக்கிறது. பிளிப்கார்ட் தளத்தில் ஆர்டர் செய்தால், தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,499 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.31,500 விலைக்கு இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போனை வாங்கலாம்.

ஓப்போ ரெனோ 15சி அம்சங்கள் (OPPO Reno 15c Specifications): ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட்டை இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. மேலும், அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஸ் 16 (ColorOS 16) கொடுக்கப்பட்டு உள்ளது.
6.57 இன்ச் (2372 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுத்துள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 1400 நிட்ஸ் எச்பிஎம் மோட் உள்ளது. ஏஜிசி டிடி-ஸ்டார் டிபிளஸ் (AGC DT STAR D+) கவர் கிளாஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பிளஸ் (Corning Gorilla Glass+) புரொடெக்சன் கொடுத்துள்ளது.
397 பிபிஐ பிக்சல் டென்சிட்டி, 240Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1.07 பில்லியன் கலர் டெப்த் கொடுக்கப்பட்டு உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமராவை இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. இதில் 4K வீடியோ ரெக்கார்டிங் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கொடுக்கப்பட்டு உள்ளது.
செல்பீ மற்றும் வீடியோ கால்களுக்காக 50 எம்பி அல்ட்ரா வைடு செல்பீ கேமரா கிடைக்கிறது. ஏஐ பிளாஷ் போட்டோகிராபி 2.0 (AI Flash Photography 2.0), ஏஐ போர்ட்ராய்டு க்ளோவ் (AI Portrait Glow), ஏஐ மோஷன் போட்டோ ஸ்லோவ்-மோ (AI Motion Photo Slow-Mo), ஏஐ மோஷன் போட்டோ எரைசர் (AI Motion Photo Eraser) ஆகிய பீச்சர்கள் இந்த டிரிபிள் ரியர் கேமராவில் கிடைக்கிறது.
80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 7000mAh பேட்டரியை இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. 8.14 எம்எம் தடிமன் மற்றும் 195 கிராம் எடை கொண்டுள்ளது. பிரீமியம் ஸ்மார்ட்போன்களில் கிடைக்கும்படி IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) கொடுக்கப்பட்டு உள்ளது.
ஆப்டர்க்ளோவ் பிங்க் (Afterglow Pink) மற்றும் ட்வைலைட் ப்ளூ (Twilight Blue) ஆகிய கலர்களில் கிடைக்க உள்ளது. இந்த ஓப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் வெளியாகிபோதே பிப்ரவரி மாதத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதற்கு ஏற்ப இப்போது பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஓப்போ தளங்களில் ப்ரீ-ஆர்டர் தொடங்கப்பட்டு உள்ளது.


Click it and Unblock the Notifications