Home
Mobile

பொங்கலோ பொங்கல்.. பேக் டூ பேக் அறிமுகம். OPPO-வின் 4வது 5G போன்.. 7000mAh பேட்டரி, IP69, 12GB ரேம்!

இந்தியாவில் ஒப்போ (Oppo) நிறுவனம் அதன் ஒப்போ ரெனோ 15 5ஜி சீரிஸின் (Oppo Reno 15 Series) கீழ் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த அடுத்த வாரமே.. இந்த சீரிஸின் கீழ் நான்காவதாக இன்னொரு 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த வாரம் - ஒப்போ ரெனோ 15 5ஜி (Oppo Reno 15 5G), ஒப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி (Oppo Reno 15 Pro 5G) மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி (Oppo Reno 15 Pro Mini 5G) ஆகிய 3 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன.

பேக் டூ பேக் அறிமுகம். OPPO-வின் 4வது 5G போன்!

ஸ்டாண்டர்ட் மற்றும் ப்ரோ மாடல்கள் இந்த மாத இறுதியில் விற்பனைக்கு வர உள்ள நிலையில், ரெனோ 15 சீரிஸின் கீழ் 4வது மாடல் ஆக ஒப்போ ரெனோ 15சி 5ஜி (Oppo Reno 15c 5G) மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?

ஒப்போ ரெனோ 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் அம்சங்கள்: ஒப்போ ரெனோ 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் 8GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.34,999 க்கும், 12GB ரேம் + 256GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.37,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போன் 2026 பிப்ரவரி மாதத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்றும், அந்த நேரத்தில் இது ஆஃப்டர்க்ளோ பிங்க் மற்றும் ட்விலைட் ப்ளூ ஆகிய கலர்களில் பிளிப்கார்ட், அமேசான் மற்றும் ஒப்போ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக விற்பனைக்கு வரும் என்று ஒப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒப்போ ரெனோ 15சி 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.57-இன்ச் FHD+ (2372 × 1080 பிக்சல்ஸ்) AMOLED டிஸ்பிளே
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- குவால்காம் 4 என்எம் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்
- 12ஜிபி வரை LPDDR4x ரேம்
- 256ஜிபி வரை UFS 3.1 ஆன்போர்டு ஸ்டோரேஜி

- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கலர்ஓஎஸ் 16
- எப்/1.8 அபெர்க்ஷர் உடனான கொண்ட 50-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார்
- எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 2-மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர்
- 30 பிரேம்களில் 4K ரெசல்யூஷன் வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் கேமரா
- 30 பிரேம்களில் 4K வீடியோ ரெக்கார்டிங்

- 7,000mAh பேட்டரி
- 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்
- 5ஜி SA மற்றும் NSA
- டூயல் 4G VoLTE
- வைஃபை 802.11 ஏசி
- ப்ளூடூத் 5.4
- IP66, IP68, மற்றும் IP69 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ரேட்டிங்
- அளவீட்டில் 158.18×74.93×8.14மிமீ மற்றும் எடையில் 195 கிராம்

ஒப்போ ரெனோ 15 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்த்து ஒப்போ பேட் 5 டேப்லெட் மாடலும் இந்தியாவில் அறிமுகமானது. ஒப்போ பேட் 5 மாடலின் வைஃபை ஒன்லி வேரியண்ட் ஆனது ரூ.26,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே டேப்லெட்டின் வைஃபை + 5ஜி வேரியண்ட் ஆனது ரூ.32,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது

இது ஒப்போ பேட் 5 டேப்லெட் மாடலின் சிங்கிள் 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜின் ஆப்ஷனின் விலை நிர்ணயங்கள் ஆகும். ஏற்கனவே முன்பதிவு செய்ய கிடைக்கும் இந்த டேப்லெட் ஜனவரி 13 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் (Flipkart) மற்றும் ஒப்போ ஆன்லைன் ஸ்டோர் வழியாக.. Aurora Pink மற்றும் Starlight Black ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வரும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Reno 15C 5G With 7000mAh Battery Launched in India Check Out Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X