Home
Mobile

அறிமுகமானது புது Oppo போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்? என்ன விலை?

ஒப்போ நிறுவனம் புதிய ரெனோ 15ஏ (Oppo Reno 15A) எனும் ஸ்மார்ட்போனை தற்போது ஜப்பானில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஒப்போ ரெனோ 15ஏ போனின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 15ஏ அம்சங்கள் (Oppo Reno 15A Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே உடன் ஒப்போ ரெனோ 15ஏ போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 10 பிட் கலர் டெப்த், 1400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் உள்ளன.

அறிமுகமானது புது Oppo போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் 6 ஜென் சிப்செட் (Snapdragon 6 Gen 1 chipset) உடன் ஒப்போ ரெனோ 15ஏ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும். அதேபோல் அனைத்து ஆப்களையும் இந்த போனில் தடையின்றி பயன்படுத்தலாம்.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது புதிய ஒப்போ ரெனோ 15ஏ ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் தெளிவான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

கலர்ஓஎஸ் 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் ஒப்போ ரெனோ 15ஏ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். அதேபோல் IP68/IP69 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கொண்டுள்ளது புதிய ஒப்போ ஸ்மார்ட்போன்.

12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் ஒப்போ ரெனோ 15ஏ ஸ்மார்ட்போன் வெளியாகி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த புதிய போனில் உள்ளது.

7000எம்ஏஎச் பேட்டரி உடன் ஒப்போ ரெனோ 15ஏ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் இரண்டு நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும்.

அறிமுகமானது புது Oppo போன்.. 7000எம்ஏஎச் பேட்டரி.. எந்த மாடல்?

இன்-டிஸ்ப்ளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதி கொண்டுள்ளது ஒப்போ ரெனோ 15ஏ போன். மேலும் வைஃபை, என்எப்சி, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய போனில் உள்ளன. ஆப்டர்குளோ பிங்க் ( Afterglow Pink), ட்வைலைட் நேவி (Twilight Navy) மற்றும் அரோரா ப்ளூ ( Aurora Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

ஒப்போ ரெனோ 15ஏ விலை
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15ஏ மாடலின் விலை 64,800 yen (இந்திய மதிப்பில் ரூ.38,082)-ஆக உள்ளது.
12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ரெனோ 15ஏ மாடலின் விலை 76,800 yen (இந்திய மதிப்பில் ரூ.45,133)-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Oppo Reno 15A with 7000mAh battery launched in Japan: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X