நாளை அறிமுகமாகும் புது Oppo போன்.. 200MP கேமரா.. ஆண்ட்ராய்டு 16 OS.. 16ஜிபி ரேம்.. எந்த மாடல்?
ஒப்போ ரெனோ 15 (Oppo Reno 15) மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ (Oppo Reno 15 Pro) ஸ்மார்ட்போன்கள் நாளை (நவம்பர் 17) சீனாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. குறிப்பாக இந்த போன்கள் அட்டகாசமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும்.
மேலும் இந்த போன்கள் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட சில வாரங்களில் இந்தியா மற்றும் உலக நாடுகளில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது ஆன்லைனில் வெளியான ஒப்போ ரெனோ 15 போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஒப்போ ரெனோ 15 அம்சங்கள் (Oppo Reno 15 Specifications): மீடியாடெக் டைமன்சிட்டி 8400 (Dimensity 8400) சிப்செட் உடன் புதிய ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் வெளியாகும். இந்த சிப்செட் மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் 6.32-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 2640 x 1216 பிக்சல்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போனின் டிஸ்பிளே சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்கும்.
அதுவும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 512ஜிபி மெமரி மற்றும் 16ஜிபி ரேம் + 1டிபி மெமரி என ஐந்து வேரியண்ட்களில் இந்த ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் வெளியாகும். பின்பு இந்த போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.
குறிப்பாக கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒப்போ ரெனோ 15 மாடல் வெளிவரும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இந்த போனின் எடை 187 கிராம் ஆகும்.
அதேபோல் 50எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 200எம்பி பிரைமரி கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனில் உள்ளது. பின்பு எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் உள்ளன.
புதிய ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போன் 6200mAh பேட்டரி உடன் இந்த அறிமுகமாகும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 80W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.
மேலும் அரோரா ப்ளூ ( Aurora Blue), ஸ்டார்லைட் போ (Starlight Bow), கேனெல் பிரவுன் (Canele Brown) மற்றும் ஸ்டார் பிங்க் (Star Pink) நிறங்களில் இந்த ஒப்போ ரெனோ 15 போன் வெளிவரும். இந்த புதிய ஒப்போ போன் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








