OPPO வரேன் ஓரம்போ.. 6500mAh பேட்டரி புது 5ஜி போன்.. ஸ்மூத் ஆன Snapdragon 7 Gen 4 சிப், ஷார்ப் ஆன SONY கேமரா!
ஒப்போ (OPPO) நிறுவனமானது இந்தியாவில் மிகவும் பிரபலமான அதன் ரெனோ சீரீஸின் கீழ் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் இம்முறை "பிக் பேட்டரி" உடன், அதாவது 6500mAh பேட்டரி கெப்பாசிட்டி உடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எந்த மாடல்? அது ஒப்போ ரெனோ 15 (Oppo Reno 15) ஸ்மார்ட்போன் ஆகும். சீனாவில் ஒப்போ ரெனோ 15சி (Oppo Reno 15c) ஆக அறிமுகமாகும் மாடல் இந்தியாவிற்கு ஒப்போ ரெனோ 15 ஆக வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கம் போல (ரெனோ சீரிஸில் உள்ள மற்ற போன்களை போலவே) இதுவும் பிரீமியம் மிட்-ரேஞ்ச் பிரிவில் டிசைன் மற்றும் கேமராக்களில் முதன்மையான கவனத்தை செலுத்துகிறது.

என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் - சிப்செட்டில் இருக்கும். ஒப்போ ரெனோ 14 ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்டை கைவிட்டு, ஒப்போ ரெனோ 15 ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்செட்டிற்கு மாறுவதாக கூறப்படுகிறது. இந்த மாற்றம் மென்மையான எக்ஸ்பீரியன்ஸை - குறிப்பாக கேமிங் மற்றும் தீவிர ஆப் பயன்பாட்டின் போது - வழங்கலாம்.
டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனில் 1.5கே ரெசல்யூஷன் மற்றும் 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.59-இன்ச் OLED டிஸ்பிளே "அப்படியே" தக்கவைக்கப்படலாம். பார்வைக்கு, இது ரெனோ 14 மாடலை போலவே தோற்றமளிக்கும் ஆனால் ரெனோ 15 ஆனது ஒரு அலுமினிய அலாய் பிரேமைகொண்டிருக்கும். இருப்பினும் அதே IP69 ரேட்டிங்கையே கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கேமராக்களும் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே இருக்கலாம். 50எம்பி சோனி LYT-600 சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட், 3.5x ஆப்டிகல் ஜூம் வரை கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா இடம்பெறலாம். சென்சார்களில் சில மேம்பாடுகள் இருக்கலாம். ஏற்கனவே ரெனோ 14 அதன் சிறந்த கேமரா செயல்திறனை நிரூபித்துள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
பேட்டரி லைஃப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் இருக்கும். ரெனோ 15 ஆனது 6500mAh பேட்டரியைக் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ரெனோ 14 மாடலில் உள்ள 6000mAh யூனிட்டை விட சற்று பெரியதாகும். ஒப்போ ரெனோ 15 மாடலின் பேட்டரி ஆனது 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரலாம். விலையை பொறுத்தவரை இது ரூ.40,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்படலாம்.
ஒப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்:
- ரெனோ 14 மாடலில் 6.59-இன்ச் டிஸ்பிளே
- ரெனோ 14 ப்ரோ மாடலில் 6.83-இன்ச் டிஸ்பிளே
- ரெனோ 14 மாடலில் மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட்
- ரெனோ 14 ப்ரோ மாடலில் டைமன்சிட்டி 8450 சிப்செட்
- ரெனோ 14 மாடலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (50MP வைட் + 8MP அல்ட்ரா-வைட் + 50MP டெலிஃபோட்டோ)
- ரெனோ 14 ப்ரோ மாடலில் 2-ஆக்சிஸ் OIS உடன் அதே வைட், அல்ட்ரா-வைட் மற்றும் டெலிஃபோட் டோகேமராக்கள்
- ரெனோ 14 மாடலில் 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 6000mAh பேட்டரி
- ரெனோ 14 ப்ரோ மாடலில் 80W SUPERVOOC வயர்டு மற்றும் 50W AIRVOOC வயர்லெஸ் சார்ஜிங்குடன் 6200mAh பேட்டரி
- ரெனோ 14 இப்போது பிளிப்கார்ட்டில் ரூ.39,990 க்கு வாங்க கிடைக்கிறது
- ரெனோ 14 ப்ரோ பிளிப்கார்ட்டில் ரூ.49,990 க்கு வாங்க கிடைக்கிறது


Click it and Unblock the Notifications








