Home
Mobile

மொத்த மார்கெட் மிரளுது.. 200MP கேமரா.. 6200mAh பேட்டரி.. IP69 ரேட்டிங்.. புது OPPO Reno 15 சீரிஸ் ரெடியாச்சு!

இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் (OPPO Reno 15 Series) அறிமுகம் செய்யப்படுவது உறுதியாகிவிட்டது. 200 எம்பி கேமரா, 6200mAh பேட்டரி, IP69 ரேட்டிங், அமோலெட் டிஸ்பிளே மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பீச்சர்களிலும் பிரீமியம் காட்டும் இந்த மாடல்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ 15 (OPPO Reno 15) மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ (OPPO Reno 15 Pro) ஆகிய மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு, கேமரா மற்றும் பேட்டரியில் பட்டையை கிளப்பியது. இதுபோக வாட்டர் ரெசிஸ்டன்ஸ், டிஸ்பிளே புரொடெக்சன் போன்ற டியூரபிலிட்டி பீச்சர்களிலும் அல்ட்ரா பிரீமியம் கொடுத்து தட்டித் தூக்கியது.

மொத்த மார்கெட் மிரளுது.. 200MP கேமரா.. 6200mAh பேட்டரி.. மாடல்?

இதனால், இந்திய மார்கெட்டில் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஓப்போ பிரியர்கள் மட்டுமல்லாமல், மற்ற மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் பிரியர்களிடையேயும் இருந்தது. இப்போது, ஓப்போ நிறுவனமே அதை உறுதி செய்துவிட்டது. டீசர் வழியாக ஓப்போ ரெனோ 15 சீரிஸ் இந்தியாவில் வெளியாகும் என்பதை உறுதி செய்துள்ளது.

ஆனால், தேதியை குறிப்பிடவில்லை. விரைவில் வெளியாகும் என்பதை ஏஐ போர்ட்ராய்டு கேமரா (AI Portrait Camera) பீச்சருடன் உறுதி செய்துள்ளது. இருப்பினும், சீன மார்கெட்டில் ஏற்கனவே இந்த மாடல்கள் வெளியாகி இருப்பதால், அந்த வெர்ஷனில் கிடைத்த பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இது இந்திய வெர்ஷனுடன் ஒத்துப்போகும்.

ஒப்போ ரெனோ 15 அம்சங்கள் (OPPO Reno 15 Specifications): 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் பாதுகாப்பு கிடைக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core Dimensity 8450 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்ஓஸ்16 (ColorOS 16) கிடைக்கிறது.

200 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா வருகிறது. மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா மற்றும் 50 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. IP66 ரேடிடிங் + IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 6200mAh பேட்டரி மற்றும் 80W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்படுகிறது.

ஒப்போ ரெனோ 15 ப்ரோ அம்சங்கள் (OPPO Reno 15 Pro Specifications): ரெனோ 15 ப்ரோ போனில் 6.78 இன்ச் (2772 x 1272 பிக்சல்கள்) அமோலெட் டிஸ்பிளே, கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் பாதுகாப்பு கிடைக்கிறது. ஆக்டா கோர் டைமன்சிட்டி 8450 4என்எம் சிப்செட் கிடைக்கிறது. முந்தைய மாடலை போலவே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் கலர்ஓஸ்16 கிடைக்கிறது.

ஓஐஎஸ் மற்றும் 4கே ரெக்கார்டிங் கொண்ட 200 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கிடைக்கிறது. 6500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளது. 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. முந்தைய மாடலில் கிடைத்த வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது.

ஓப்போ ரெனோ 15 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ. 37,430ஆகவும், ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.46,920 பட்ஜெட்டிலும் இருக்கிறது. இதே பட்ஜெட்டில் இந்திய மார்கெட்டில் எதிர்பார்க்கலாம். மிட்-ரேஞ்ச் பிரியர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 15 Series With AI Portrait Camera India Launch Confirmed Expected Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X