சிதற விட்டான் OPPO.. 10000mAh பேட்டரி உடன் புது ஸ்மார்ட்போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் அதன் அடுத்த ரெனோ சீரீஸ் ஸ்மார்ட்போன்களை - உலகம் முழுவதும் பேசப்படும் மாடல்களாக அறிமுகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டது போல் தெரிகிறது. அது ஒப்போ ரெனோ 15 சீரீஸ் (OPPO Reno 15 Series) ஸ்மார்ட்போன்கள் ஆகும்.
இந்த சீரிஸின் கீழ் ஒப்போ ரெனோ 15 (OPPO Reno 15), ஒப்போ ரெனோ 15 ப்ரோ (OPPO Reno 15 Pro) மற்றும் ஒப்போ ரெனோ 15 ப்ரோ பிளஸ் (OPPO Reno 15 Pro Plus) என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில் ஸ்மார்ட் பிக்காச்சு என்கிற டிப்ஸ்டர் வழியாக கிடைத்த ஒரு லீக் தகவல் - இந்த சீரிஸில் ஒரு 10000எம்ஏஎச் பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன் (10000mAh Battery) இருக்கும் என்று பரிந்துரைக்கிறது. கூடவே அந்த மாடலில் பெரிஸ்கோப் லென்ஸ் உடனான 200 மெகாபிக்சல் கேமரா (200 Megapixel camera with Periscope Lens) இருக்கும் என்றும் கூறுகிறது.
ஆனால் மேற்கண்ட 2 முக்கிய அம்சங்களும் எந்த மாடலில் இருக்கும் என்பதை அவர் வெளிப்படுத்தவில்லை. பெரும்பாலும் இது ஒப்போ ரெனோ 15 சீரீஸின் ப்ரோ பிளஸ் வேரியண்ட்டில் இடம்பெறலாம் அல்லது எந்த ஸ்மார்ட்போனிலும் இடம்பெறாமல்.. வெறுமனே ஒரு லீக் ஆக கூட கடந்துபோகலாம்.
ஒப்போ ரெனோ 15 சீரீஸில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒப்போ ரெனோ 15 மற்றும் ரெனோ 15 ப்ரோ ஆகியவைகள் முறையே 6.3-இன்ச் மற்றும் 6.8-இன்ச் டிஸ்பிளேக்களை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஸ்டாண்டர்ட் வேரியண்ட் காம்பாக்ட் டிசைனை பெறலாம்
மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே மேம்பட்ட கலர் ரீபுரொடெக்ஷன் உடனான, மேம்பட்ட இமேஜிங் திறன்களையும் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர்த்து ஒப்போ ரெனோ 15 மற்றும் ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் குறித்து எந்த விவரங்களும் இல்லை. ப்ரோ பிளஸ் மாடலின் நிலையும் அதுதான்.
ஒப்போ ரெனோ 15 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? எக்ஸ் தளம் வழியாக, டிப்ஸ்டர் யோகேஷ் பிரார் வெளிப்படுத்தியுள்ள விவரங்களின்படி, ஒப்போ ரெனோ 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது இப்போது இந்தியாவிலும் பிற சந்தைகளிலும் சோதனை கட்டத்தில் இருக்கிறது. ஒப்போ ரெனோ 15 மாற்று ரெனோ 15 ப்ரோ ஆகிய மாடல்கள்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. சீன அறிமுகம் நவம்பரில் நடக்கலாம்.
முன்னதாக அறிமுகமான ரெனோ 14 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது 1.5கே ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.59-இன்ச் பிளாட் எல்டிபிஸ் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் கொண்டு இயங்குகிறது.
கேமராக்களை பொறுத்தவரை ரெனோ 14 ஸ்மார்ட்போன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் ஓஐஎஸ் ஆதரவு உடன் கூடிய 50எம்பி சோனி ப்ரைமரி சென்சார், 8எம்பி அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 3.5x ஜூம் கொண்ட 50எம்பி ஜேஎன்5 பெரிஸ்கோப் லென்ஸ் உள்ளன. முன்பக்கத்தில் 50எம்பி செல்பீ கேமரா உள்ளது. கடைசியாக இது 80W வயர்டு சார்ஜிங் ஆதரவு உடனான 6000mAh பேட்டரியை கொண்டுள்ளது
ஒப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களை பொறுத்தவரை இது ஒரு பெரிய 6.83-இன்ச் 1.5கே ஓஎல்இடி டிஸ்பிளேவுடன் வருகிறது. இது டைமன்சிட்டி 8450 சிப்பால் இயக்கப்படுகிறது. இது 16ஜிபி ரேம் மற்றும் 1டிபி ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. இது 6200mAh பேட்டரியை பேக் செய்கிறது, இது 80W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








