நவ.17 குறிச்சாச்சு.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. 6300mAh பேட்டரி.. 80W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் (OPPO Reno 15 Series) மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் சத்தமே இல்லாமல் வெளியாகி இருக்கிறது. இந்த நவம்பரில் ஏகப்பட்ட மாடல்கள் வெளியாக இருக்கிறது. இப்போது, ஓப்போ பிரியர்களுக்கும் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. ஏனென்றால், இந்த முறை ரெனோ சீரீஸின் கீழ் மூன்று மாடல்கள் களமிறங்க இருக்கிறது. இந்த ரெனோ 15 சீரிஸ் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
முன்னதாக வருகிற நவம்பர் மாத இறுதியில் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் சீன மார்கெட்டில் வெளியாகும் என்று மார்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டன. அதேபோல டிசம்பரில் இந்தியாவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. ஆனால், இப்போது, எதிர்பார்த்ததைவிட முன்னதாகவே வர இருப்பது தெரிகிறது. அதாவது, வெளியீட்டு தேதி மற்றும் நேரத்துடன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

இதை ஓப்போ நிறுவனம் வெளியிடவில்லை. சீனாவில் வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன்கின் விவரங்களை முன்கூட்டியே டிப் போல கொடுக்கும் வெய்போ (Weibo) மூலம் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் கிட்டத்தட்ட உறுதிபோலத்தான். ஏனென்றால், வெய்போவில் வெளியாகும் முக்கால்வாசி விவரங்கள் உறுதியாகி இருக்கின்றன. அதன்படி நவம்பர் 17ஆம் தேதி வெளியீடு இருக்கிறது.
சீனாவின் நேரப்படி இரவு 7 மணிக்கு வெளியீட்டு நிகழ்வு நடக்க இருக்கிறது என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர்ட அடுத்த வாரம், ஓப்போ நிறுவனத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிட வாய்ப்புள்ளது. இதைத் தவிர மற்ற விவரங்கள் அந்த போஸ்டரில் இடம்பெறவில்லை. இப்போது, மார்கெட்டில் கசிந்த பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ ரெனோ 15 சீரிஸின் கீழ் ஓப்போ ரெனோ 15 5ஜி (OPPO Reno 15 5G), ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி (OPPO Reno 15 Pro 5G) மற்றும் ஓப்போ ரெனோ 15 மினி (OPPO Reno 15 Mini) ஆகிய மூன்று மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் மினி ஸ்மார்ட்போன் புதிய வரவாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஆகவே, மினி டிஸ்பிளே கொண்ட காம்பாக்ட் மாடலாக இருக்க வாய்ப்புள்ளது.
ஓப்போ ரெனோ 15 சீரிஸ் அம்சங்கள் (OPPO Reno 15 Series Specifications): ரெனோ 15 ஸ்மார்ட்போனில் 6.59 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ரெனோ 15 ப்ரோ மாடலில் 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, 1.5K ரெசொலூஷன் கிடைக்க இருக்கிறது. ரெனோ 15 மினி ஸ்மார்ட்போனில் 6.31 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே கிடைக்க இருக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் கிடைக்க இருக்கிறது.
இந்த மாடல்களில் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 (MediaTeK Dimensity 8450) சிப்செட் கிடைக்க இருக்கிறது. ப்ரோ மாடலில் 16 ஜிபி ரேம் கொண்ட வேரியண்ட் வெளியாக இருக்கிறது. ரெனோ 15 ப்ரோ மற்றும் ரெனோ 15 மினி மாடல்களில் 200 எம்பி மெயின் கேமரா கிடைக்க இருக்கிறது. இதில் சாம்சங் எச்பி5 சென்சாரும், ஓஐஎஸ் டெக்னாலஜியும் கிடைக்கிறது.
மேலும், 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. 32 எம்பி செல்பீ கிடைக்க இருக்கிறது. கலர்ஓஎஸ் 16 (Color OS 16) வர இருக்கிறது. 6300mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் வர இருக்கிறது. இதில் ஒரு மாடலில் 7000mAh பேட்டரி கிடைக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால், முந்தைய வெர்ஷன்களில் 6300mAh கேபாசிட்டிக்கு மேல் பேட்டரி கிடைத்தது.


Click it and Unblock the Notifications








