Home
Mobile

வேற போன் வாங்காம வெயிட் பண்றது புத்திசாலித்தனம்.. ஒரே நாளில் 3 புதிய OPPO போன்கள் அறிமுகம்.. எப்போது?

ஒப்போ ரெனோ 15 சீரீஸ் (OPPO Reno 15 Series) அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸில் ஒப்போ ரெனோ 15 (OPPO Reno 15), ரெனோ 15 ப்ரோ (OPPO Reno 15 Pro) மற்றும் புதிய ரெனோ 15 மினி (OPPO Reno 15 Mini) ஆகிய மூன்று மாடல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக ஒப்போ நிறுவனத்தின் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் ஸ்டாண்டர்ட் ரெனோ 15 மற்றும் ரெனோ 15 ப்ரோ ஆகிய 2 மாடல்களும் பட்டியலிடப்பட்டுள்ளன. அதன் மூலம் இவ்விரு ஸ்மார்ட்போன்களின் ரேம், ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மற்றும் சாத்தியமான கலர் ஆப்ஷன்கள் (RAM, Storage and Color Options) குறித்த விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே நாளில் 3 புதிய OPPO போன்கள் அறிமுகம்.. எப்போது?

ஒப்போ ரெனோ 15 சீரிஸ் அறிமுக தேதி (OPPO Reno 15 Series Launch Date): இது சீனாவில் வருகிற நவம்பர் 17 ஆம் தேதி அன்று உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்கு (இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு) அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ரெனோ 15 சீரீஸின் இந்திய அறிமுகமானது (OPPO Reno 15 Series India Launch) டிசம்பர் 2025 இல் நடக்கலாம்.

ஒப்போ ரெனோ 15 மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை (OPPO Reno 15 Mini Specifications) எதிர்பார்க்கலாம்? ​​டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் (Sudhanshu Ambhore) மற்றும் 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக கிடைத்துள்ள விவரங்களின்படி, ஒப்போ ரெனோ 15 சீரீஸின் கீழ் 6.31 இன்ச் அளவிலான டிஸ்பிளே கொண்ட ரெனோ 15 மினி மாடல் அறிமுகமாகும். இது 6.59 இன்ச் டிஸ்பிளே கொண்ட ரெனோ 15 மற்றும் 6.78 இன்ச் டிஸ்பிளே கொண்ட ரெனோ 15 ப்ரோ ஆகிய மாடல்களுடன் சேர்ந்து அறிமுகமாகும்.

சிப்செட்டை பொறுத்தவரை ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே டைமன்சிட்டி 8450 சிப்செட் (Dimensity 8450 chipset) மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரெனோ 15 ஸ்மார்ட்போனின் சிப்செட் மற்றும் பிற அம்சங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை.

கேமராக்களை பொறுத்தவரை ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் ரியர் கேமரா அமைப்பில் 200 மெகாபிக்சல் சாம்சங் எச்பி5 பிரைமரி கேமராவும் (200 megapixel Samsung HP5 Main Camera), அல்ட்ரா-வைட் மற்றும் பெரிஸ்கோப் ஜூம் கேமராக்களுக்கான 50 மெகாபிக்சல் சென்சார்களும் இணைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செல்பீக்களுக்கு, இரண்டு மாடல்களிலும் 50 மெகாபிக்சல் செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம். மேலும் முழு ஒப்போ ரெனோ 15 சீரீஸும் ஆண்ட்ராய்டு 16 (Android 16) அடிப்படையிலான கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) உடன் இயங்கும். ​​ரெனோ 15 மினி மற்றும் ரெனோ 15 ப்ரோ ஸ்மார்ட்போன்களின் பேட்டரி திறன் குறித்து எந்த தகவலும் இல்லை. ப்ரோ வேரியண்ட்டில் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு (Wireless Charging Support) இருக்கலாம்.

2025 டிசம்பர் மாத இறுதிக்குள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படும் ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஜனவரி 2026 முதல் அல்லது இரண்டாவது வாரத்தில் இருந்து இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலையை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15 ஆனது 39,990 க்கும், ரெனோ 15 ப்ரோ மாடல் ரூ.49,990 க்கும் அறிமுகம் செய்யப்படலாம். மினி மாடலின் விலை இரண்டிற்கும் இடையே நிலைநிறுத்தப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 15 Series Launch Date Announced Oppo Reno 15 Mini May Launch on Same day November 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X