Home
Mobile

OPPO போட்ட போடு.. 200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்.. 120 Hz AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு பெற்ற ஓப்போ ரெனோ 15 சீரிஸ் (OPPO Reno 15 Series) மாடல்களின் அறிமுக தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கவே, டிசைன் மட்டுமல்லாமல், கேமரா, பேட்டரி மற்றும் ஓஎஸ் விவரங்கள் உறுதி செய்யப்பட்டன. இப்போது, அடுத்த வாரம் வெளியாக இருப்பது கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

வருகிற ஜனவரி 8 ஆம் தேதி ஓப்போ ரெனோ 15 சீரிஸ் வெளியாக உள்ளது. இதில் ஓப்போ ரெனோ 15 5ஜி (OPPO Reno 15 5G) மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி (OPPO Reno 15 Pro 5G) ஸ்மார்ட்போன்கள் வெளியாக இருக்கின்றன. பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட இருப்பதும் உறுதியாக உள்ளது. ஆகவே, ஓப்போ மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் பீச்சர்கள் வெளியாகின.

OPPO போட்ட போடு.. 200MP கேமரா.. 6500mAh பேட்டரி.. 80W பாஸ்ட் சார்ஜிங்!

இதில் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 (Octa Core Dimensity 8450) சிப்செட் மற்றும் கலர்ஓஎஸ் 16 (ColorOS 16) கிடைக்கிறது. பெரிய 6500mAh பேட்டரி கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா மற்றும் 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது. ஹாலோப்யூசன் டெக்னாலஜி (HoloFusion Technology) கொண்ட பேக் பேனல் கிடைக்கிறது. ஒயிட் மற்றும் ப்ளூ கலர்கள் இருக்கின்றன.

இந்த அறிமுக தேதி மற்றும் பீச்சர்கள் மட்டுமே அதிகாரப்பூரவாக வெளியாகி இருக்கின்றன. இருப்பினும், சீன மார்கெட்டில் இந்த ஓப்போ ரெனோ 15 5ஜி மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி மாடல்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இந்தியாவில் உறுதி செய்யப்பட்ட பீச்சர்களும் அப்படியே இருக்கின்றன. ஆகவே, சீன வெர்ஷன்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ ரெனோ 15 5ஜி அம்சங்கள் (OPPO Reno 15 5G Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 4என்எம் (Octa Core Dimensity 8450 4nm) சிப்செட்டை இந்த ரெனோ 15 5ஜி கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் கலர்எஸ் 16 கிடைக்கிறது. மேலும், 6.32 இன்ச் (2640 x 1216 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைத்துள்ளது.

1.5K ரெசொலூஷன், 120 Hz ரெஃப்ரெஷ் ரேட், 240 Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 3840Hz டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஓப்போ கிரிஸ்டல் ஷீல்டு கிளாஸ் (OPPO Crystal Shield Glass) பாதுகாப்பு கிடைக்கிறது. 200 எம்பி மெயின் கேமரா (ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன்) மற்றும் 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது.

மேலும், 50 எம்பி பெரிஸ்கோப் கேமரா கிடைக்கிறது. 50 எம்பி செல்பீ கேமராவை கொடுத்துள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் மற்றும் இன்பிராரெட் சென்சார் கிடைக்கிறது. IP66 ரேட்டிங் + IP68 ரேட்டிங் மற்றும் IP69 ரேட்டிங் டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் உள்ளது. 80W சூப்பர்வூக் சார்ஜிங் மற்றும் 6200mAh பேட்டரியை இந்த ரெனோ 15 5ஜி போன் கொடுத்துள்ளது.

இதே பீச்சர்கள் ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி போனிலும் கிடைக்கிறது. ஆனால், 6.78 இன்ச் டிஸ்பிளே இதில் கிடைக்கிறது. அதேபோல 6500mAh பேட்டரி, 80W ஃபாஸ்ட் சார்ஜிங், 50W ஏர்வூக் வயர்லெஸ் சார்ஜிங் கிடைக்கிறது. சீன மார்கெட்டில் ஓப்போ ரெனோ 15 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.37,430 பட்ஜெட்டிலும், ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி போன் ரூ.46,170 பட்ஜெட்டிலும் கிடைத்தது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Reno 15 Series 200MP Camera 6500mAh Battery Launching in India on January 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X