OPPO போட்ட ஒரே போடு.. 200MP கேமரா.. OLED டிஸ்பிளே.. அடுத்த மாசம் இருக்கு பெரிய சம்பவம்.. எந்த மாடல்?
ஓப்போ பிரியர்களிடையே மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருக்கும் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் (OPPO Reno 15 Series) மாடல்களின் இந்திய வெளியீடு குறித்த விவரங்கள் கசிந்துள்ளது. ரெனோ சீரிஸில் வழக்கமாக கிடைக்கும் மாடல்கள் மட்டுமல்லாமல், புதிதாக மினி மாடலும் சேர்க்கப்பட இருக்கிறது. இதனாலேயே எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. 200 எம்பி கேமரா, ஓஎஸ்இடி டிஸ்பிளே, IP69 ரேட்டிங் போன்ற முக்கிய பீச்சர்கள் ஏற்கனவே மார்கெட்டில் கசிந்துள்ளன.
இப்போது, வெளியீட்டு விவரங்களும் அதில் சேர்ந்து, ஓப்போ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டுவைத்துள்ளது. சீன மார்கெட் மட்டுமல்லாமல், இந்திய மார்கெட்டிலும் ரெனோ சீரிஸ் மாடல்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஏனென்றால், கேமரா பீச்சர்கள் மற்றும் டியூரபிலிட்டி பீச்சர்கள் அல்ட்ரா பிரீமியமாக கொடுக்கப்படும்.

இதனாலேயே இந்தியாவில் இருக்கும் கேமரா பிரியர்களுக்கு இந்த சீரிஸ் எப்போது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த முறை காம்பாக்ட் டிசைனில் ஸ்மார்ட்போனை விரும்பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி புதிய மாடல் கிடைக்க இருப்பது தெரிகிறது. அதாவது, ஓப்போ ரெனோ சிரீஸ்களில் அதிகபட்சம் 2 மாடல்கள் வெளியாகும்.
முன்னதாக வெளியான ஓப்போ ரெனோ 14 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் கூட ஓப்போ ரெனோ 14 5ஜி (OPPO Reno 14 5G) மற்றும் ஓப்போ ரெனோ 14 ப்ரோ 5ஜி (OPPO Reno 15 Pro 5G) ஆகிய 2 மாடல்கள் மட்டுமே வெளியாகின. இதற்கு முன்பு வெளியான ரெனோ 13 சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் அதேபோல ரெனோ 13 5ஜி மற்றும் ரெனோ 13 ப்ரோ மாடல்கள் மட்டுமே இருந்தன.
ஆனால், இந்த ரெனோ 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஓப்போ ரெனோ 15 5ஜி (OPPO Reno 15 5G), ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி (OPPO Reno 15 Pro 5G) மட்டுமல்லாமல், ஓப்போ ரெனோ 15 மினி (OPPO Reno 15 Mini) மாடலும் வெளியாக இருக்கிறது. இந்திய மார்கெட்டில் டிசம்பர் மாதத்தில் இந்த ஓப்போ ரெனோ 15 சீரிஸ் மாடல்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
டிப்ஸ்டர் சுதான்ஷு அம்போர் மூலமாக இந்த வெளியீட்டு விவரங்கள் கசிந்துள்ளது. டிசம்பர் வெளியீட்டுக்கு பிறகு ஜனவரியில் ஓப்பன் சேல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் வெளியாவதற்கு முன்பாக சீன மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. ஆகவே, முழு பீச்சர்களும் வெளியீட்டுக்கு முன்பே தெரியவரும் என்பதில் சந்தேகமில்லை.
ஓப்போ ரெனோ 15 மினி ஸ்மார்ட்போனில் 6.3 இன்ச் அமோலெட் (AMOLED) டிஸ்பிளே மற்றும் பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைக்க இருக்கிறது. ஓப்போ நிறுவனத்தின் முதலாவது காம்பாக்ட் மாடலாகவும் இது இருக்கும் என்று கூறப்படுகிறது. ரெனோ 15 5ஜி மற்றும் ரெனோ 15 ப்ரோ மாடல்களில் மீடியாடெக் டைமன்சிட்டி 8500 (MediaTek Dimensity 8500) சிப்செட் கிடைக்க இருக்கிறது.
ஏனென்றால், முன்னதாக வெளியான ஓப்போ ரெனோ 14 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 830 சிப்செட் மற்றும் ரெனோ 14 ப்ரோ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டைமன்சிட்டி 450 சிப்செட் கிடைத்து. ஆகவே, அடுத்த சீரிஸ் நிச்சயம் அப்கிரேட் செய்யப்பட்டு, டைமன்சிட்டி 8500 சிப்செட்களுடன் கிடைக்கலாம். ரெனோ 15 ஸ்மார்ட்போனில் 6.32 இன்ச் ஓஎல்இடி வருகிறது.
1.5K ரெசொலூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது. 200 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி பெரிஸ்கோப் டெலிபோட்டோ கேமரா வருகிறது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் உள்ளது. ப்ரோவில் 6.78 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளே, 7000mAh பேட்டரி, 50W வயர்லெஸ் சார்ஜிங், IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








