அடிச்சான் பாரு OPPO.. 6500mAh பேட்டரி.. 200MP கேமரா.. 50MP டெலிபோட்டோ.. புது Reno 15 சீரிஸ் விலை எப்படி?
ஓப்போ நிறுவனத்தின் ரெனோ மாடல்களுக்கு இந்திய மார்கெட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதில் ஓப்போ ரெனோ 15 சீரிஸ் (OPPO Reno 15 Series) மாடல்கள் அடுத்து வெளியாக உள்ளன. இந்த மாடல்களின் விலை விவரங்கள் மார்கெட்டில் கசிந்துள்ளன. மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டை எதிர்பார்க்க முடிகிறது. இந்த ஓப்போ ரெனோ 15 சீரிஸ் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெடில் ஜனவரி 8ஆம் தேதி இந்த ரெனோ 15 சீரிஸ் மாடல்கள் வெளியாக இருக்கின்றன. இதில் ஓப்போ ரெனோ 15 5ஜி (OPPO Reno 15 5G) மற்றும் ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி (OPPO Reno 15 Pro 5G) மாடல்கள் வெளியாவது உறுதியாகும். மேலும், ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி (OPPO Reno 15 Pro Mini 5G) மாடலும் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பது முன்னதாகவே உறுதியானது. மேலும், 200 எம்பி மெயின் கேமரா, 50 எம்பி டெலிபோட்டோ கேமரா, 6500mAh பேட்டரி மற்றும் 80W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ தளங்களின் மைக்ரோசைட்டில் உறுதியாகிவிட்டன. மேலும், ஹோலோப்யூஷன் டெக்னாலஜி பேக் பேனல் கிடைக்க உள்ளது. ஏஐ போர்ட்ராய்டு குளோவ் கிடைக்க உள்ளது.
கலர்ஓஎஸ் 16 (ColourOS 16) கொடுக்கப்பட்ட உள்ளதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 8450 (Octa Core Dimensity 8450) சிப்செட் கொண்ட மாடல்களாக இந்த ஓப்போ ரெனோ 15 சீரிஸ் இருக்கப் போகிறது. இந்த பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. விலை விவரங்கள் உறுதி செய்யப்படவில்லை.

இருப்பினும், டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ்வின் எக்ஸ் தளம் வழியாக ஓப்போ ரெனோ 15 5ஜி, ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி, ஓப்போ ரெனோ 15 ப்ரோ மினி 5ஜி ஆகிய மூன்று மாடல்களின் ரேம், மெமரி மற்றும் விலை விவரங்கள் கசிந்துள்ளன. சீன மார்கெட்டில் கிடைத்த விலையைவிட ரூ.8,000 அதிகமான பட்ஜெட்டை இந்த கசிந்த விலைகள் காட்டுகின்றன.
ஓப்போ ரெனோ 15 5ஜி விலை (OPPO Reno 15 5G Price): 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.45,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.48,999ஆகவும் இருக்கிறது. மேலும், 12 ஜிபி ரேம் + 612 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.53,999ஆகவும் இருக்கிறது.
ஓப்போ ரெனோ 15 ப்ரோ 5ஜி விலை (OPPO Reno 15 Pro 5G Price): 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.67,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.72,999ஆகவும் இருக்கிறது. மேலும், ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் 2 வேரியண்ட்கள் கிடைக்க உள்ளன.
இதில் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.59,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.64,999ஆகவும் இருக்கிறது. இந்த விலை விவரங்களே கசிந்துள்ளன. ஜனவரி 8ஆம் தேதி அறிமுகமாக இருப்பதால், நாளை விலை விவரங்கள் அதிகாரப்பூர்வமாக தெரியவந்துவிடும்.


Click it and Unblock the Notifications








