OPPO-வா கொக்கா.. 7.99 மிமீ ஸ்லிம் டிசைனில் புதிய மினி ஸ்மார்ட்போன்.. OnePlus, Honor, Vivo வயிற்றில் புளி!
காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் (Compact Flagship Smartphones) என்கிற மினி ஸ்மார்ட்போன்கள் (அதாவது கைக்கு அடக்கமாக, ஒப்பீட்டளவில் சற்றே சிறிய டிஸ்பிளே மற்றும் பிரீமியம் அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள்) ஆனது 2026 ஆம் ஆண்டில் முக்கிய டிரண்டிங் ஆக இருக்க போகிறது.
ஒன்பிளஸ் 15எஸ் (OnePlus 15s), ஹானர் மேஜிக் 8 ஸ்லிம் / மினி (Honor Magic 8 Slim / Mini), விவோ எக்ஸ்300எஸ் (Vivo X300s) என பல நிறுவனங்களின் மினி ஸ்மார்ட்போன்கள் 2026 ஆம் ஆண்டிற்காக வரிசைக்கட்டி காத்துக்கொண்டிருக்கின்றன (பேட் நியூஸ் ஆக ஐக்யூ 15 மினி கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது).

இதற்கிடையில், இந்த பட்டியலில் ஒப்போ நிறுவனமும் சேர உள்ளதாக தகவல் கிடைத்து உள்ளது. அதாவது ஒப்போ நிறுவனமும், கூடிய விரைவில் ஒரு புதிய மினி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதுவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆன ரெனோ சீரிஸின் கீழ்!
அது ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி (Oppo Reno 15 Pro Mini) ஸ்மார்ட்போனாக இருக்கலாம். இது ரெனோ சீரிஸில் முதல் காம்பாக்ட் ஸ்மார்ட்போனாக இருக்கும். சிறிய மற்றும் கையாள எளிதான போன்களுக்கான அதிகரித்து வரும் தேவையை நிவர்த்தி செய்ய ஒப்போ நிறுவனமும் களமிறங்கி உள்ளது. அதே நேரத்தில் பெரிய டிஸ்பிளே கொண்ட ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்கிறது
பெயர் குறிப்பிடுவது போலவே - புதிய ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனானது ஒப்போ ரெனோ 15 சீரீஸின் ஒருபகுதியாக இருக்கும், நினைவூட்டும் வண்ணம் இந்த சீரிஸின் கீழ் ஏற்கனவே 3 மாடல்கள் (சீனாவில்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன: ஒப்போ ரெனோ 15, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மற்றும் ஒப்போ ரெனோ 15சி.
ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 6.32 இன்ச் AMOLED டிஸ்பிளே
- சுமார் 1.6 மிமீ அளவிலான மெல்லிய பெஸ்ல்ஸ்
- சுமார் 187 கிராம் எடை
- தோராயமாக 7.99 மிமீ தடிமன்
- கிளாஸ் பேக் பேனல்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP66, IP67 மற்றும் IP69 ரேட்டிங்
எப்போது அறிமுகம்? சரியான லான்ச் டைம்லைன் குறித்த விவரங்கள் இல்லை. ஆனால் இது இந்தியா உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளுக்கு மட்டுமே வரம்பிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ரெனோ 15 சீரீஸின் இந்திய அறிமுகம் டிசம்பரில் நடக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மினி ஸ்மார்ட்போனும் இடம்பெறலாம்.
சில நம்பகமான அறிக்கைகள் ஒப்போ ரெனோ 6 ப்ரோ மினி உட்பட மொத்த ஒப்போ ரெனோ 15 சீரீஸ் மடல்களுக்கே, உலகளாவிய சந்தைகளுக்கு வரும் போது ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 சிப்பை பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கின்றன. மேலும் இந்த சீரிஸில் உள்ள சில மாடல்கள் 6,500mAh வரையிலான பெரிய பேட்டரிகளை பேக் செய்யும் மற்றும் 80W பாஸ்ட் வயர்டு சார்ஜிங்கை ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ 15 மினி கேன்சல்: ஒரு சமீபத்திய அறிக்கை ஐக்யூ 15 மினி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படாமல் போகலாம் என்கிறது. இந்த தகவல் நம்பகமான டிப்ஸ்டர் ஆன டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் (DCS) வழியாக கிடைத்துள்ளது. இதற்கு பதிலாக ஐக்யூ நிறுவனமானது, சிறந்த கேமராக்கள், வலுவான செயல்திறன் மற்றும் பெரிய பேட்டரிகளை வழங்கும் - மேக்ஸ் "Max" அல்லது பிளஸ் "Plus" பிராண்டிங்கை உருவாக்கலாம் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications