அதிரவைக்கும் விலை.. 200எம்பி கேமரா.. 6200mAh பேட்டரி.. வருகிறது புது Oppo 5ஜி போன்.. எந்த மாடல்?
ஒப்போ நிறுவனம் வரும் 2026 ஜனவரி மாதம் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிலையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு இந்த போனின் விவரக்குறிப்புகள் மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. இது குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.
ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி அம்சங்கள் (Oppo Reno 15 Pro Mini specifications): 6.32-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.

மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட் (MediaTek Dimensity 8450 chipset) உடன் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் கேமிங் ஆப்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும்.
12ஜிபி வரை ரேம் மற்றும் 512ஜிபி வரை மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) ஆதரவுடன் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஒப்போ போனில் உள்ளது.
200எம்பி பிரைமரி கேமரா + 50எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 50எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது இந்த ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. ஆகவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும்.
6200mAh பேட்டரி உடன் ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்தால் 80W சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
அதேபோல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers), 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/ NSA), டூயல் 4ஜி வோஎல்டிஇ (Dual 4G VoLTE), வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) மற்றும் ஜிபிஎஸ் (GPS) போன்ற வசதிகளும் இந்த ஒப்போ போனில் உள்ளன.
தற்போது ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ஒப்போ ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் ரூ.59,999 விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








