பாதி இந்தியா வாங்குமே.. OPPO புது Mini போன் விலை.. 7.99மிமீ டிசைனில் 6200mAh பேட்டரி, 200MP கேமரா!
ஒப்போ (OPPO) நிறுவனமானது 2026 ஆம் ஆண்டை பல் வகையான புதிய ஸ்மார்ட்போன்களின் அறிமுகத்துடன் தொடங்க போகிறது. இந்நிறுவனம் ரெனோ 15, ரெனோ 15 ப்ரோ மற்றும் ரெனோ 15 ப்ரோ மினி ஆகிய 3மாடல்களை உள்ளடக்கிய ஒப்போ ரெனோ 15 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.
இந்த 3 மாடல்களில் மினி ஸ்மார்ட்போன் (Oppo Reno 15 Pro Mini) மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு உள்ளது. (எப்படியும் ஜனவரி 2026 இல் வந்துவிடும், ஆனாலும்) இன்னமும் ரெனோ 15 சீரீஸின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்படாத சூழ்நிலையில், ஒப்போ ரெனோ ப்ரோ 15 ஸ்மார்ட்போனின் இந்திய விலை விவரங்கள் ஆன்லைனில் லீக் ஆகி உள்ளன.

நம்பகமான டிப்ஸ்டர் ஆன அபிஷேக் யாதவ் வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஒப்போ ரெனோ ப்ரோ 15 ஸ்மார்ட்போனின் பாக்ஸ் லீக் ஆகியுள்ளது. அதன்படி குறிப்பிட்ட ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் அபிஷனின் விலை ரூ.64,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் பாக்ஸ் விலைகள் பொதுவாக ரீடெயில் லையை விட அதிகமாகவே இருக்கும்.அதன்படி பார்த்தால் ரெனோ 15 ப்ரோ மினி ஸ்மார்ட்போன் ஆனது ரூ.59,999 க்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று குறிப்பிட்ட லீக்கர் நம்புகிறார். கூடுதலாக ஒப்போ நிறுவனம் சில அறிமுகசலுகைகளையும் (வங்கி தள்ளுபடி) வழங்கக்கூடும். ஆக இந்த ஸ்மார்ட்போனின் "ஃபைனல் ப்ரைஸ்" இன்னும் குறையும்.
ஒப்போ ரெனோ 15ப்ரோ மினி ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.6 மிமீ ஸ்லிம் பெஸல்கள்
- 93.35 சதவீத ஸ்க்ரீன் டூ பாடி ரேஷியோ
- 6.32 இன்ச் அமோ எல்இடி டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8450 சிப்செட்
- 12GB ரேம் மற்றும் 512GB வரை இன்டர்னல் ஸ்டோரேஜ்
- 200-மெகாபிக்சல் ப்ரைமரி ரியர் கேமரா
- 50-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமரா
- 50-மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 50-மெகாபிக்சல் செல்பீ கேமரா
- 6,200mAh பேட்டரி
- 80W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்
- எடை சுமார் 187 கிராம்
- அளவீட்டில் 7.99மிமீ
- IP66 + IP68 + IP69 ரேட்டிங்
- யுஎஸ்பி டைப்-சி போர்ட்டில் அரிப்பு எதிர்ப்பிற்கான பிளாட்டினம் பினிஷ்
ஒப்போ ரெனோ 15சி என்கிற நான்காவது மாடல்: மற்றொரு டிப்ஸ்டர் ஆன அபிஷேக் யாதவ் (@yabhishekhd) வெளியிட்டுள்ள விவரங்கள் ஆனது உறுதி செய்யப்பட்ட 3 ரெனோ 15 சீரீஸ் ஸ்மார்ட்போன்களுடன் சேர்ந்து ஒப்போ ரெனோ 15சி மாடலும் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று பரிந்துரைக்கிறது.
அது மட்டுமல்லாமல், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 40,000 க்கும் குறைவான விலையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.57-இன்ச் FHD LTPS OLED டிஸ்பிளே இடம்பெறலாம். இது 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் சிங்கிள் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் விருப்பத்துடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 சிப்செட்டை பேக் செய்யலாம்
கேமராக்களை பொறுத்தவரை இது 50 மெகாபிக்சல் ப்ரைமரி ஷூட்டர், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 50 மெகாபிக்சல் அல்ட்ராவைடு செல்பீ கேமரா பேக் செய்யப்படலாம்.
பேட்டரியை பொறுத்தவரை இது 7000mAh பேட்டரி மற்றும் 80W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அளவீடுகளை பொறுத்தவரை ஒப்போ ரெனோ 15சி ஸ்மார்ட்போன் ஆனது 8.14மிமீ தடிமன் கொண்டதாகவும், 189 முதல் 195கிராம் வரை எடை கொண்டதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








